|
லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த காலத்தில், அவரை படம் எடுக்க புகைப்படக் கலைஞர்கள் அனுமதி கேட்டனர். அவர் சம்மதிக்கவில்லை. பேட்டி முடிந்து கிளம்பிய பின், சாஸ்திரியின் உதவியாளர், ஏன் நீங்கள் படம் எடுக்க விரும்பவில்லை? என்று கேட்டார்.நீங்கள் தாஜ்மகாலைப் பார்த்திருக்கிறீர்களா? என்றார்.ஓ! பார்த்திருக்கிறேனே! அதன் அழகை நான் சொல்லித் தான்உங்களுக்குத் தெரியவேண்டுமா? என்றார்உதவியாளர். அவரிடம் சாஸ்திரி, தாஜ்மகாலுக்குஇருவகையான கற்கள் பயன்படுத்தப்பட்டன. ஒன்று பாறாங்கல். மற்றொன்றுசலவைக்கல். வெளியில் இருக்கும் சலவைக்கல்லின் அழகைக் கண்டு உலகம் வியக்கிறது.ஆனால், அதன் அடித்தளத்தில் மறைவாக இருக்கும் பாறாங்கல்லே அதன் கம்பீரத்தையும்,அழகையும் தாங்கிநிற்கிறது. மனிதன் எவ்வளவு புகழ்பெற்றிருந்தாலும், வெளியில் தெரியாமல் வாழவே விரும்ப வேண்டும். அதுவே என் கொள்கை. சிறுவயதில் என் பள்ளி ஆசிரியர் வலியுறுத்தியஇந்த விஷயத்தைகடைபிடிப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி, என்று விளக்கம் அளித்தார்.உதவியாளர் வியப்பில் ஆழ்ந்து விட்டார்.ஆன்மிகமும் இந்தக் கொள்கையைத் தான்கற்றுத் தருகிறது.மகாபாரதத்தில் கர்ணன் மிகப்பெரிய தர்மவான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரு இடத்தில் கூட அவன் தன் தர்மம் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டதாகதகவல் இல்லை. இவரை போன்றவர்கள் தங்கள் தர்மம் பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டதில்லை. இப்போது எதற்கெடுத்தாலும் நான் முந்தி.. நீ முந்தி என்ற நிலை தான் இருக்கிறது. |
|
|
|