|
தட்சனின் மகளாக அவதரித்தாள் பார்வதி. இவள் சிவனைத் திருமணம் செய்தாள். ஒருசமயம், மருமகனான சிவனையே தட்சன் அவமதித்தான். இதனால், மறுபிறப்பில் பத்மாசுரனாக பிறந்தான். இவன் செய்யாத அட்டூழியமே இல்லை. இதுபற்றி சிவனுக்குதகவல் சென்றது. அவர், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைசிந்தினார். அந்தப் பொறிகள் குழந்தைகளாக வடிவெடுத்தன. குழந்தைகளையும் ஒன்று சேர்த்த பார்வதி அவனுக்கு ஸ்கந்தன் என பெயர் வைத்தாள். ஸ்கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன் என்று பொருள்.கந்தன் அழகாக இருந்ததால் முருகன் என்று பெயர் பெற்றார். முருகன் என்றால் அழகன். சிறுவனாகிய முருகன் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபாகு உள்ளிட்ட நவவீரர்களுடன் இணைந்து பத்மாசூரனுடன் போரிட்டார். அவனை இருகூறாகக் கிழித்து, ஒரு பகுதியை சேவலாக்கி தன் கொடியிலும், ஒரு பகுதியை மயிலாக மாற்றி தன் வாகனமாகவும் மாற்றிக் கொண்டார். |
|
|
|