|
முருகனின் திருநாமங்களில் ஒன்று விசாகன். வி என்பது பறவை அதாவது மயில்; சாகன் என்பது சஞ்சரிப்பவன். மயிலில் வலம்வருபவன் என்று பொருள். முருகன், சரவணப் பொய்கையில் அவதரித்த போது, அவரைக் காண வந்த சூரியன் மயிலைப் பரிசாக வழங்கினார். அப்போது மயிலேறிய முருகன்மயில்வாகனன் என்னும் பெயர் பெற்றான். நாரதர் கொடுத்த ஞானப்பழத்திற்காக நடத்திய போட்டியில், முருகன் வேதத்தை மயிலாக்கி உலகைச் சுற்றி வந்தார். அதுவேமுருகனின் இரண்டாவது மயில். ஆதிசங்கரரும், அருணகிரிநாதரும் இந்தவேத மயிலையே பாடல்களில்குறிப்பிடுகின்றனர். மயூராதிரூடம் என்று ஆதிசங்கரர் சுப்பிரமண்ய புஜங்கத்தில்போற்றுகிறார்.ஆன தனி மந்திர ரூப நிலை கொண்டது ஆடும் மயில் என்பது அறியேனே என்று இதன் மந்திரத் தன்மையை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.மாயையில் வல்ல சூரபத்மன் பல வடிவங்கள் எடுத்து,முருகனுடன் போரிட்டான். சக்கரவாகப் பறவையாக சூரன் மாறியபோது, முருகன் தேவேந்திரனை வரவழைத்து மயிலாக்கி அதில் ஏறிப் புறப்பட்டார். ஆக,சூரசம்ஹாரத்தில் முருகனோடு இருந்தது இந்திரமயில். சூரசம்ஹார முடிவில், சூரன் மாமரமாக மாறி நின்றான். வேலாயுதத்தில் அதை இரண்டாகப் பிளக்க, ஒருபுறம் மயிலும், மறுபுறம் சேவலாகவும் தோன்றின. அந்தசூரமயிலைத் தன்வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றார் முருகன். அது நான்காவது மயில்.விசாகனுக்கும், வைகாசி விசாகத்திற்கம் நெருங்கிய தொடர்புண்டு. மயில் மீதேறி முருகன் உலகைச் சுற்றிய வந்ததிருநாளே வைகாசி விசாகம். விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். இந்நாளில்குருநாதரிடம் மந்திரஉபதேசம் பெறுவது சிறப்பு. ஆறுமுகம் கொண்டமுருகன் மயில் மீது உலகைச் சுற்றிய இந்நாளில் வழிபட்டால் நல்ல ஞானம் உண்டாகும்.
|
|
|
|