|
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் ஒன்றில், வேடிச்சி காலி லன்று விழுவோனே என்று குறிப்பிடுகிறார். அதாவது, முருகப்பெருமான், வேடுவப் பெண்ணான வள்ளியின் காலில் விழுந்தார் என்ற பொருளில் இதைப் பாடினார்.இதனை உள்ளார்ந்து படித்தால் இதற்குள் இருக்கும் பொருள் விளங்கும்.வள்ளி, திருமாலின் மகள். இவள் முருகப்பெருமானின் மீது பக்தி கொண்டவள். தெய்வானையும் திருமாலின் மகள் தான். அவளும், முருக பக்தையே என்றாலும், தேவர்களை காத்ததற்காக, அவளை இந்திரன் முருகனிடம் ஒப்படைத்து விட்டான். அவள் முருகனுடன்கலந்து விட்டாள். இது பயன் கருதி செய்த பக்தி வகையில் அடங்கும்.ஆனால், வள்ளியம்மை பூமியில் வேடர் குலத்தில் பிறக்கிறாள். முருகனைக் குல தெய்வமாகக்கொள்கிறாள். அவளது பக்தியின் ஆழத்தைச் சோதிக்கிறார் முருகன். எல்லா சோதனையிலும் அவள் வெல்கிறாள். அவளது பக்தியைப் பாராட்டி, அவள் காலிலேயே விழுந்து அவளை ஆட்கொள்கிறார். அதாவது, தன்னிடம் பக்தி கொண்டவர்களை, முருகன் கருணையுடன் ஆட்கொள்வார் என்ற பொருளில் அருணகிரிநாதர் இத்திருப்புகழ் பாடலில் குறிப்பிடுகிறார். |
|
|
|