|
பக்தர் ஒருவர், இறை அடியார்களுக்கு தினமும் உணவளித்து வந்தார். ஒரு நாள் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் வந்து அன்னம் பாலிக்கக் கேட்டார். அந்த பக்தர், முதியவரை உணவருந்த உள்ளே வருமாறு அழைத்தார். முதியவரோ, கைகளை அலம்பாமல் உடனே அமர்ந்து சாப்பிடத் தொடங்கி விட்டார். அதைக்கண்ட பக்தர், முதியவரிடம், கை, கால்களை சுத்தம் செய்து, இறைவனைப் பிரார்த்தனை செய்த பிறகே உணவருந்த வேண்டும் என்றார். அம்முதியவர் அதை லட்சியம் செய்யாமல் சாப்பிட்டு விட்டுச் சென்றார். அன்றிரவு கடவுள் பக்தரின் கனவில் தோன்றி, இத்தனை வருடம் அந்த முதியவருக்கு யார் உணவளித்தார்கள்? என்று கேட்டார். பக்தர், எல்லாம் தங்கள் அருள் என்று பதிலளித்தார். இத்தனை வருடமும் நான் அவருக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லையே! ஒரு நாள் உணவளித்த நீ நிபந்தனை விதிக்கலாமா? என்றார் கடவுள். வெட்கமடைந்த பக்தர், இறைவனிடம் மன்னிப்பு கேட்டார். அன்புக்கு ஏது நிபந்தனை? |
|
|
|