|
ஒருவன் விலையுயர்ந்த மோதிரம் ஒன்றை
அணிந்திருந்தான். ஒருநாள் அந்த மோதிரம் தொலைந்து விட்டது. மிக்க
வருத்தத்துடன் ஒரு முனிவரைச் சந்தித்தான். சுவாமி விலை உயர்ந்த நவரத்தின
மோதிரம் ஒன்று அணிந்திருந்தேன். அது காணாமல் போய் விட்டது. திரும்பக்
கிடைக்குமா? என்றான். அவனை பார்த்துச் சிரித்த முனிவர், பகட்டின் மீது
பற்றுக்கூடாது என்பது உன் விரலுக்குத் தெரிகிறது. ஆனால் உன் மனதிற்குத்
தெரியவில்லையே! இப்படிப்பட்ட ஆடம்பரப் பற்றே உன் வெற்றிக்குத் தடங்கல்!
என்றார். அவன் கூறியதன் பொருள் அவனுக்கு விளங்கவில்லை. சிறிது நேரம்
பேசாமல் நின்றான். பின் முனிவரே சொன்னார். மோதிரம் தொலைந்துவிட்டது. என்று
உன் மனம் கவலைப்படுகிறது. ஆனால் அதோடு ஒட்டி உறவாடிய உன் விரல் கொஞ்சமாவது
வருத்தப்படுகிறதா? என்றார். அப்போதுதான் அவனுக்குப் புரிந்து தேவையில்லாத
பற்றுக்கொள்வதால் உள்ளம்தான் கவலைப்படுகிறது. ஆடம்பரப் பொருட்கள் அணியும்
விரலோ, கழுத்தோ, கையோ, காதோ கவலைப்படுவதில்லை தேவையற்ற பற்று ஒரு மனிதனின்
வெற்றிக்கு விரோதி என்பதைப் புரிந்து கொண்டான். |
|
|
|