|
சிறுவன் ஒருவன், அறிஞர் ஒருவரைப் பார்த்து, சுவாமி! வாழ்நாள் முழுவதும் பயன்படக்கூடிய அறிவுரை ஒன்றை வழங்குங்கள் என்று கேட்டான். அவர் அதற்கு, சிங்கத்தை போல் இரு, நாயை போல் அல்ல! என்றார். சிறுவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவரிடமே விளக்கம் கோட்டான். அறிஞர், ஒரு சிங்கத்தின் மீது அம்பு செலுத்தினால் அது அம்பைப் புறக்கணித்து விட்டு அதை எய்தவனன நோக்கிப் பாயும். நாயின் மேல் எதையாவது எறிந்தால் அது எறிந்தவனை விட்டுவிட்டு தன்மேல் எறியப்பட்ட பொருளைத் தேடி அதன் பின்னால் ஓடும். அதுபோல் நமக்குச் சோதனைகளும், பிரச்சனைகளும் வரும்போது அவற்றையே நினைத்துக் கவலைப்படாமல், அதை நமக்குக் கொடுத்த கடவுளை நினைக்க வேண்டும். ஏனெனில் இறைவன் யாருக்கும் காரணமின்றி துயரங்களைத் தருவதில்லை. அவர் நமக்கு வழிகாட்டி, நம் துயரங்களைப் போக்குபவர் என்றார். அறிவுரை கேட்ட அச்சிறுவன் வேறு யாருமில்லை; மனிதநேய மிக்க தத்துவ ஞானி தாதா ஜே.பி. வாஸ்வானி தான்! |
|
|
|