|
ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்கலாம் என்று பொதுவான ஒரு கருத்தை சொல்வார்கள். ஆனால், இப்படி பொய் சொல்லி திருமணம் செய்வது தவறு என்கிறது சாஸ்திரம். அப்படியானால், இந்த சுலவடை எதற்காக உருவானது?ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம் என்பதை ஒருவருக்கொருவர் ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்று பொருள் கொள்ளக்கூடாது. நிச்சயிக்கப்பட்ட திருமணம், கடைசி நேரத்தில் நின்று போகும் பட்சத்தில் அதை நடத்துவதற்கு பொய் சொல்லலாம் என்று சாஸ்திரம் அனுமதி தந்திருக்கிறது.ஒரு இல்லத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணமேடையும் அமைத்தாயிற்று. அப்போது,வரதட்சணை குறைபாடுபோன்ற ஏதோ ஒருபிரச்னை எழுகிறது.இரு வீட்டாரும்தகராறு செய்துகொள்கின்றனர்.
திருமணம் நின்றுவிடுமோ என்ற சூழ்நிலை... இந்த சூழ்நிலையில் அந்த திருமணத்தை ஏதாவது ஒரு பொய்சொல்லி நடத்த சாஸ்திரம் சம்மதிக்கிறது. அவ்வாறு பொய் சொன்னால் அது பொய் ஆகாது. அதற்குரிய தண்டனையும் கிடைக்காது. இதுபோல, ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்யும்போது, சில நன்மைகள் கருதியும் பொய் சொல்லலாம். அட...நம்ம சீதாதேவியே கூட, ஒருமுறை பொய்சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயிட்டாங்க. எப்போது தெரியுமா?ஆஞ்சநேயர் அசோக வனத்தை அழித்தார். அப்போது அங்கிருந்த ராட்சஷிகள் சீதையிடம், அந்த குரங்கு எங்கிருந்து வந்ததென உனக்கு தெரியுமா? உன்னிடம் அது பேசிக் கொண்டிருந்ததாக சொல்கிறார்களே! என கேட்டதற்கு, அது யாரென்றே எனக்கு தெரியாது. ஒரு வேளை இந்த வனத்தை அழித்ததால், உங்கள் அசுர கூட்டத்தை சேர்ந்ததாக இருக்குமோ என நான் எண்ணியிருந்தேன், என சொல்லி ஆஞ்சநேயரை காப்பாற்றி விட்டாள். ஆஞ்சநேயர் ராமதுõதன் என தெரிந்திருந்தும், அவரைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் கருதி பொய் சொல்லி விட்டாள். இதைத்தான், பொய்மையும் வாய்மையிடத்தே புறைதீர்ந்த நன்மை பயக்குமெனின்என்று திருக்குறள் கூறுகிறது.திருமணம் நடக்கும் முன்பு பொய் சொல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது பிற்காலத்தில் பிரச்னைகளைத் தான் உருவாக்கும். |
|
|
|