|
புத்தர் ஒரு கிராமத்துக்கு சென்றார். அவருடையபோதனைகளைக் கேட்ட மக்கள், இந்த மனுஷன் செய்யும் போதனைகளைக் கேட்டால் இல்லற எண்ணம் மாறி துறவற வாழ்க்கை மீது பற்று வந்துவிடும் போல் இருக்கிறதே, என பயத்துடன் பேசிக்கொண்டனர். அவரைக் கண்டபடி திட்டினர்.புத்தர் பொறுமையுடன் அவற்றைக் கேட்டுக் கொண்டார். அவர்களை வெறுப்பாக கூட பார்க்கவில்லை. எந்த வகையிலும், அவர் தனது எதிர்ப்பைகாட்டாதது மக்களுக்கு வியப்பாக இருந்தது. பொறுமையிழந்த அவர்கள், உம்மை இவ்வளவு அவமானப்படுத்துகிறோமே! உமக்கு உரைக்கவே இல்லையா?என்று அவரிடமே கேட்டனர்.எந்தவித சலனமும் இல்லாமல் புத்தர் பதில் சொன்னார். நான் நேற்று ஒருகிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்கே உள்ள மக்கள் என்னை அன்போடும் மகிழ்ச்சியோடும் வரவேற்றார்கள். என் பசியை போக்க நிறைய பழம் கொடுத்தார்கள். ஆனால், அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களிடமே கொடுத்துவிட்டேன். அதேபோல தான் நீங்கள் என்னை வஞ்சித்து பேசிய வார்த்தைகளையும் உங்களிடமே திருப்பி தந்து விட்டேன். எனக்கு சுவையான பழங்களும் ஒன்றுதான், பழிச்சொல்லும் ஒன்றுதான், என்றார்.மக்கள் பதில் பேச முடியாமல் மவுனமாய் நின்றனர். நாம் நல்வழியில் செல்லும் போது பாராட்டும் கிடைக்கும், அவமதிப்புகளும் உருவாகும். ஆனால், இரண்டையும் நாம் ஏற்கத் தேவையில்லை. எவ்வித எதிர்பார்ப்புமின்றி நம்கடமைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டியது தான்! |
|
|
|