Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » துணிச்சலுக்கு தோல்வியில்லை!
 
பக்தி கதைகள்
துணிச்சலுக்கு தோல்வியில்லை!

ஒரு சிறுவன் துõக்கத்தில் அடிக்கடி புலம்புவான். பெற்றோர் எழுப்பிக் கேட்டால், கனவில் சிங்கம் ஒன்று வந்து பயமுறுத்துவதாக சொன்னான். காலப்போக்கில் அவனது மனநிலை மிகவும் பாதித்தது. எதைப் பார்த்தாலும் பயப்பட ஆரம்பித்தான். பெற்றோர் அவனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.  மருத்துவர் அவனிடம்,தம்பி, நீ பயப்படும்படியான எந்த உருவத்தைப் பார்த்தாலும் உடனே மனதிற்குள், இந்தஉருவம் எனது பழையநண்பனாயிற்றே! என்னோடு நட்பு கொண்டவனாயிற்றே! இதைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்! என்று சொல். அதன் அருகில் தைரியமாகப் போய் அதன் தலையில் தட்டு. உனக்கு இனி பயமே இருக்காது. என்றார். சிறுவனும் அப்படியே செய்தான். சிலநாட்களில், அவனது பயம் நீங்கி விட்டது. நமது வாழ்வில் துன்பம், ஏமாற்றம் போன்ற சிங்கங்களும், கரடிகளும் அடிக்கடிகுறுக்கிடுகின்றன. அவற்றைக்கண்டு நாம் அஞ்சுகிறோம். அவை நம் வாழ்வில்குறுக்கிடும் சமயத்தில், உங்களைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். நீங்கள் என்னை தாக்குவதற்காக வரவில்லை. பரிசோதிக்கவே வந்திருக்கிறீர்கள். என் வாழ்வில் நீங்களும் ஓர் அங்கம், என உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அந்த துணிச்சல் உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar