Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அண்ணாமலையாரின் தந்தை!
 
பக்தி கதைகள்
அண்ணாமலையாரின் தந்தை!

உலகத்துக்கே தந்தையாய் இருக்கும் சிவபெருமான் திருவண்ணாமலை நகரில் அண்ணாமலையார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். ஆனால் அந்த அண்ணாமலையார் தனது தந்தையாக ஒரு பக்தனை ஏற்றுக்கொண்டார். திருவண்ணாமலையில் ஒரு காலத்தில் வல்லாள மாராசன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தைப்பேறு இல்லை. அண்ணாமலையார் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவன். அவரிடம் குழந்தை பாக்கியம் வேண்டி அழுது முறையிட்டான். ஆனாலும் அவனுக்கு குழந்தையே இல்லை. அவனது பக்தியின் ஆழத்தை சோதிக்க அண்ணாமலையார் ஒரு அடியவர் வேடம் பூண்டு அரண்மனைக்குள் நுழைந்தார். அவரை வல்லாள மாராசன் மிகுந்த அன்புடன் வரவேற்று வேண்டியன செய்து கொடுத்தான். அடியவர் வடிவில் இருந்த அண்ணாமலையார் இந்த உபசரிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வெளியே வந்ததும் குழந்தையாக மாறி விட்டார்.அரண்மனை வாசலில் குழந்தை அழுது கொண்டிருந்தது. வல்லாள மாமன்னன் இச்செய்தி அறிந்து அரண்மனை வாசலுக்கு சென்றான். மிகுந்த பிரகாசத்துடன் செக்கச்செவேலென இருந்த அக்குழந்தையை உச்சிமோந்து அரண்மனைக்குள் எடுத்துவந்தான். அரசியரான சல்லமாதேவி, மல்லமா தேவி ஆகியோரிடம் குழந்தையை கொடுத்து, நாம் வளர்த்துவரலாம். இது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கையில் இருந்த குழந்தை மாயமாய் மறைந்து விட்டது. வல்லாளன் அழுது புலம்பினான்.

அண்ணாமலையாரே ! இனியும் நான் உயிருடன் இருக்க மாட்டேன். சோதனைக்கும் ஓர் எல்லை உண்டு. அதை தாண்டிய நிலையிலும், இந்த தேசத்திற்கு ஒரு வாரிசை கொடுக்க இயலாத நிலையிலும் இனியும் உயிர்வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே, எனது உயிரை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லியபடியே அரண்மனை துõணில் முட்டினான். அப்போது அசரீரி ஒலித்தது.  வல்லாள மாராசா ! இது எனது திருவிளையாடல் தான். இப்பிறவியில் உனக்கு குழந்தை பாக்கியம் கிடையாது. ஆனாலும், சில நிமிடங்கள் உன் கையில் குழந்தையாக தவழ்ந்தது நான்தான். குழந்தை இல்லாதவர்கள் இறந்தபிறகு நரகத்தை அடைவார்கள் என்பது சாஸ்திரம். ஆனால் உனக்கு நரகம் கிடையாது. ஏனெனில் நீ எனக்கே தந்தையாக இருந்திருக்கிறாய். உன் மறைவுக்குப்பிறகு நானே உனக்குரிய ஈமக்கிரியைகளை செய்வேன். கவலை வேண்டாம் என கூறினார். இதன்பிறகு உண்ணாமலை பிராட்டியுடன் வானத்தில் தோன்றி வல்லாள மாராசனுக்கு காட்சி கொடுத்தார். இதன்பின் பலகாலம் வாழ்ந்த வல்லாள மாமன்னன் கப்பம் செலுத்த மறுத்த பகைநாட்டு மன்னன்மீது போர் தொடுத்தான். இந்தப் போரில் வல்லாளன் மிகுந்த வீரத்துடன் செயல்பட்டான். ஆனால் பகைவருடைய வஞ்சக செயலால் அவன் கொல்லப்பட்டான். இதையறிந்த அவனது பட்டதரசியாரும் தீயில் பாய்ந்து உயிர்விட்டனர். இந்தச்செய்தியை வல்லாள மாமன்னனின் முதலமைச்சர் ஒற்றர்கள் மூலமாக அண்ணாமலையார் கோயிலுக்கு தகவல் அனுப்பி வைத்தார். ஒற்றர்கள் முன்னிலையில் தோன்றிய அண்ணாமலையார் அவர்களுடன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். வல்லாள மாமன்னனுக்கு ஈமக்கிரியைகளை செய்தார். திருவண்ணாமலையில் உள்ள கவுத்தி மலையிலிருந்து புறப்பட்டு வரும் துரிஞ்சிலாற்றங்கரையில் இந்த கிரியை நிகழ்ச்சி நடந்தது. இப்போதும் இந்த நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடத்தப்படுகின்றது. திருவிழாவையொட்டி ஒரு கடிதம் வாசிக்கப்படும். அதில் வல்லாளனின் முதலமைச்சர் எழுதிய செய்தி இருக்கும்.

பெருமானே ! உம்முடைய தந்தையார் கப்பம் செலுத்த மறுத்த ஒட்டியநாட்டு அரசன் மீது படையெடுத்து சென்றார். மூன்று நாட்கள் ராப்பகலாக போர் நடைபெற்றது வெற்றிகொள்ள இயலாத பகையரசன் போர் அறத்திற்கு மாறாக கபட நெறியில் கைவாள் வீசியதால் வீர வசந்த வைபோக வல்லாள மகாராஜ வள்ளல், உத்தராயண மாதம் (தை) பூச நட்சத்திரம், உதயாதி நாழிகை இரண்டில் வீரசுவர்க்கம் எய்தினார் என்ற செய்தியை தங்கள் பொன்னார் திருவடிகண் விண்ணப்பித்துக் கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் வழிவழி அடிமை என குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்பிறகு அண்ணாமலையார் மேளதாளங்கள் இல்லாமல் அமைதியாக ஆலயத்திலிருந்து கிரியை நடக்கும் இடத்திற்கு எழுந்தருள்வார். சுவாமியின் மன அமைதிக்காக ஒரு ஓதுவார் தேவாரம் படிப்பார். ஆற்றங்கரையில் கிரியை நடக்கும். கிரியையை முடித்துவிட்டு கோயிலுக்குள் செல்லும்போது வல்லாள மாமன்னால் கட்டப்பட்ட கீழ்கோபுரத்தின் வாசலில் நின்று அந்த மன்னனின் திருவுருவத்திற்கு அபிஷேக, ஆராதனை நடந்த பின்னரே கோயிலுக்குள் செல்வார். தை மாதம் பூச நட்சத்திரத்தில் வல்லாளன் இறந்தபிறகு மாசி மக நட்சத்திரத்தில் இந்த கிரியை நடந்தது. இதற்கு இடைப்பட்ட நாட்களில், இப்போது திருவண்ணாமலை மக்கள் மங்கல நிகழ்ச்சிகள் எதையும் நடத்த மாட்டார்கள். கிரியையின்போது அப்பகுதி மக்கள் அண்ணாமலையாருக்கு ஆற்றங்கரையில் வைத்து அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் ஆகியவை செய்வார்கள். உலகியலில் இறுதி கிரியை செய்பவருக்கு சம்பந்தியாய் இருப்பவர் புத்தாடை கொண்டுவந்து கட்டுதல் போல அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மைக்கும் இம்மக்கள் சம்பந்தியாக இருந்து பட்டாடை சார்த்துகிறார்கள். பரம்பைரையாக ஒரு சிற்றுõரைச் சேர்ந்த மக்கள் இப்பணியை செய்து வருவதால் அந்த ஊருக்கு சம்பந்தனுõர் என்ற பெயர் இன்று வரை நிலவிவருகிறது. மறுநாள் அண்ணாமலையாருக்கு மகுடாபிஷேகம் நடக்கும். தந்தைக்குப் பின் மைந்தனே ஆட்சிப்பொறுப்பை  ஏற்க வேண்டும் என்ற முறைப்படி அண்ணாமலையார் முடிசூட்டிக் கொள்வார். திருச்சியில் இறைவன் தாய் வடிவம் கொண்டு தாயுமானவர் என்ற பெயர் பெற்றார். திருவண்ணாமலையில் இறைவன் மகன் போல நடித்து மகனும் ஆனார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar