|
தங்கள் கிராமத்துக்கு வந்த துறவிக்கு, ஒரு பணக்காரர் அறுசுவை உணவு படைத்து சாப்பிடும்படி சொன்னார். அப்போது, ஏழை விவசாயி ஒருவர் இரண்டு ரொட்டித் துண்டுகளைக் கொண்டு வந்தார். அந்தத் துறவி, விவசாயி கொடுத்த ரொட்டியை விருப்பத்துடன் சாப்பிட ஆரம்பித்தார். இதைப் பார்த்த பணக்காரருக்கு கோபம் வந்தது. சுவாமி! நான் விருப்பத்துடன் அளித்த உணவை ஏன் ஏற்க மறுத்து சாதாரண ரொட்டியைசாப்பிடுகிறீர்களே? என்று ஆவேசமாகக் கேட்டார்.துறவி மிக அமைதியாக, விவசாயி கொடுத்த ரொட்டியை பிழிந்தார். அதிலிருந்து பால்கொட்டியது. பின்னர் பணக்காரர் அளித்த உணவைப் பிழிந்தார்.அதிலிருந்து ரத்தம்சிந்தியது. இதைக்கண்டதும் பணக்காரர் அதிர்ந்து விட்டார். பணக்காரரைப் பார்த்த துறவி, நீ பிறரை ஏமாற்றி, அவர்களது உழைப்பை கசக்கிப் பிழிந்து சேர்த்த பாவப் பணத்தால்தயாரிக்கப்பட்ட உணவில் இருந்து ரத்தம் கொட்டியது. ஆனால், விவசாயி தன் உழைப்பில் கிடைத்த பணத்தில் செய்தரொட்டியில் பால் வழிந்தது. காரணம், அதில் பாவம் இல்லை. உழைப்பு இல்லாத பணத்தில் செய்தஉணவை எப்படி உண்பது? என்றார்.பணக்காரர் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டார். |
|
|
|