Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » திக்கற்றவர்க்கு தெய்வமே துணை!
 
பக்தி கதைகள்
திக்கற்றவர்க்கு தெய்வமே துணை!

பெரும் பணக்காரர் ஒருவர் மதுரையில் வசித்தார். தளபதி என்னும் பெயர் கொண்ட அவருக்கு, சுசீலை என்ற மனைவி இருந்தாள். அவர்களுக்கு குழந்தை இல்லை. தங்கையின் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினார்.ஒருநாள்...ஏதோ ஒரு காரணத்தால் தளபதியும், தங்கையும் பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் உண்டானது. தங்கை தளபதியை,குழந்தையில்லாத பாவி நீ! பிள்ளையைத் தத்துக் கொடுத்த என் மீதே கோபிக்கிறாயா? என் பிள்ளை இல்லாவிட்டால் உனக்கு வாழ்வேது? என்று கோபித்தாள்.மனம் வெறுத்த தளபதி, தன் சொத்தை எல்லாம் தங்கையின் பிள்ளைக்கு உரிமையாக்கி விட்டு, மனைவியுடன் தவம் செய்ய காட்டுக்குப் போய்விட்டார். நீண்ட நாளானது. தளபதி திரும்புவதாகத் தெரியவில்லை.இதைப் பயன்படுத்தி, தளபதியின் தங்கை வசமிருந்த சொத்துக்களை உறவினர்கள் அபகரித்தனர்.அனைத்தையும் இழந்த தங்கை, மதுரை சொக்கநாதரிடம் முறையிட்டாள். உமையொரு பாகனே! அறியாத சிறுபிள்ளையுடன் செய்வதறியாமல் தவிக்கிறேன். அண்ணனின் அருமை இப்போது தான் புரிகிறது. என்னைக் காப்பாற்று! என்று அழுதாள்.கனவில் தோன்றிய சிவன், சொத்துகளை அபகரித்த உறவினர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வா! அங்கே நான் உனக்குரிய நீதியைவழங்குவேன், என்றார். அதன்படியே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாள் தளபதியின் தங்கை.

அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அப்போது யாரும்எதிர்பாராதவிதமாக தளபதி அங்கே வந்தார். தங்கையையும், குழந்தையையும் தழுவிக் கொண்டு, எனது சொத்துக்களை இந்தக் குழந்தையின் பெயரிலேயே எழுதி வைத்தேன். ஆனால், என் உறவினர்களோ அவற்றை அநியாயமாக கவர்ந்து கொண்டனர். இவள் கழுத்தில் நான் அணிவித்த நகையைக் கூட விட்டுவைக்கவில்லையே என முறையிட்டார்.உறவினர்களோ, இவர் உண்மையான தளபதியாக இருக்க முடியாது என்று நீதிபதியிடம் எதிர் வாதம் செய்தனர்.ஆனால், தளபதி அவர்களின் பெயர், குலம், கோத்திரம், தொழில் என்று அனைத்தையும் நீதிமன்றத்தில் விவரித்தார். உறவினர்கள் வசமாகசிக்கிக் கொண்டனர். தாங்கள் செய்த தவறை ஒத்துக் கொண்டதால், தளபதியின் தங்கையிடமே சொத்துக்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. இதன்பின் தளபதியைக் காணவில்லை. அப்போது தான் சிவனே தளபதி வடிவில் வந்த உண்மை அனைவருக்கும் தெரிய வந்தது. திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்பதை விளக்கும் இந்த வரலாறு மதுரையில் நடந்தது. பரஞ்ஜோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தில் உள்ளது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar