Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்னையானாலும் குற்றம் குற்றமே!
 
பக்தி கதைகள்
அன்னையானாலும் குற்றம் குற்றமே!

ஒருசமயம், சிவபெருமான் பார்வதிதேவிக்கு ஆகமங்களை உபதேசிக்க உத்தேசித்தார். குழந்தைகள் விநாயகர், முருகனை நந்தியிடம்ஒப்படைத்து அவர்களைக்கவனித்துக் கொள்ளச் சொன்னார். பாடம் துவங்கியது. தேவியோ, பாடத்தில் நாட்டம்இல்லாமல் வேறு எதையோ வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள். சிவபெருமான்கோபமடைந்து, தேவியை மீனவ பெண்ணாகப் பிறக்கும்படி சாபமிட்டார். இந்நேரத்தில் விநாயகரும், முருகனும் அங்கே வந்து விட்டனர். தாயை சபித்ததால் அவர்களுக்கு தந்தை மீது கோபம் ஏற்பட்டது. ஆகமச் சுவடிகளை எல்லாம் கடலில் விட்டெறிந்தனர். மனைவியிடம் கோபித்தது போல பிள்ளைகளிடம் கோபிக்க முடியுமா? அதனால், கோபம் வேறு பக்கம் திரும்பியது. அம்பாளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும்போது, பிள்ளைகளை பாட அறைக்குள் அனுமதித்த நந்தீஸ்வரர் மீது சுவாமியின் கோபம் திரும்பியது. கொடுத்த வேலையைச் சரிவர செய்யாத நீ, பாதுகாவலுக்கு தகுதியில்லாதவன் எனக்கூறி, அவரை சுறாமீனாகப்பிறக்குமாறு சபித்தார். கடலுக்குள் சுறாவாகத் திரிந்த நந்தீஸ்வரர் கடும் அட்டகாசம் செய்தார். மீனவர்கள் துன்பப் பட்டனர். அச்சுறாமீனைப் பிடித்து தரும் மீனவனுக்கு தன் மகளையே பரிசாக அறிவித்தார் மீனவர் தலைவர். சாபகாலம் முடிந்ததும், மீனவ ராஜகுமாரியான தேவியை மணக்கும் ஆர்வத்தில் சிவபெருமானே மீனவஇளைஞனாக வந்து சுறாவின் கொட்டத்தை அடக்கினார். மீனவர் தலைவனுக்கு இறைவன் காட்சி தந்து, அவரது மகளாகப் பிறந்திருந்த பார்வதிதேவியை மணந்தார். படிக்கும் போது வேடிக்கை பார்க்கக்கூடாது, வேலையில் கவனக்குறைவு கூடாது என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டவே, லோக அன்னையான பார்வதிக்கே தண்டனை தந்து சிவன் இந்த திருவிளையாடலை நடத்தினார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar