|
அரண்மனைக்கு ஒரு துறவி வந்தார். வரவேற்று விருந்தளித்தான் மன்னன். மன்னா! நலம் தானே! என்றார் துறவி.சுவாமி! எனக்கென்ன குறைச்சல்... என் நலனில் அக்கறை கொண்டோர் இத்தனை பேர் இங்கிருக்க..... என்றான் மன்னன். அது எப்படி தெரியும் உனக்கு? என்றார் துறவி.வேண்டுமானால் நீங்களே அதை சோதித்துப் பாருங்களேன் என்றான் மன்னன்.சபையோரைக் கூட்டிய துறவி, மன்னருக்காக உயிரையும் தர நீங்கள் தயாராக இருப்பதாக அறிந்தேன். ஆனால், யாரும் உயிரைத் தர வேண்டாம். அவருக்காக ஒரு குடம் பால் தந்தால் போதும், என்றார்.பாலா... எதற்கு? என்று கேட்டனர். மன்னருக்கு நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தப்போகிறேன். அதற்கு பால் தேவைப்படுகிறது. இன்று இரவு அதற்காக பெரிய அண்டா வைக்கப்படும். அதில் பாலை ஊற்றுங்கள் என்றார் துறவி. அப்படியே செய்கிறோம் என்றனர். மறுநாள் பொழுது புலர்ந்தது. துறவி மன்னனுடன் பாலைக் காண வந்தார். அதில் பால் சிறிதும் இல்லை. அவ்வளவும் தண்ணீர். காரணம் புரியாமல் விழித்தான் மன்னன். நாம் ஒருவர் மட்டும் தண்ணீர் ஊற்றினால் யாருக்குத் தெரியும் என்று ஒவ்வொருவரும் நினைத்ததால் ஏற்பட்ட நிலை இது, என்ற துறவி, உலகம் எப்படிப்பட்டது என்பது இப்போதாவது புரிகிறதா.... அனுபவப்பட்டால் தான் உண்மை புரியும் என்றார்.
|
|
|
|