|
கொம்பன் என்ற மான் குளத்தில் நீர் குடிக்கச் சென்றது. அதன் நிழல் தண்ணீரில் தெரிந்தது. கொம்புகளை அசைத்தபடி பெருமிதத்துடன் அடிக்கடி தன்னைப் பார்த்து மகிழ்ந்தது. அப்போது அதன் குட்டிஅருகில் வர, செல்லமே!மானாகப் பிறந்ததற்காக நீபெருமைப்படு. பார்வைக்குஅழகாகவும், ஆபத்துக்கு ஆயுதமாகவும் இருக்கும் கொம்பைப் போல சிறந்த விஷயம் வேறில்லை. எதிரி யாராவது வந்தால் ஒரே முட்டு தான்.... அந்த இடத்திலேயே ஆள் காலி! என்று சொல்லி சிரித்தது.இந்த சமயத்தில் திடீர் சத்தம் கேட்டது. வேட்டைக்காரன் ஒருவன் ஒலி எழுப்பிய படி வந்தான். அவ்வளவு தான்! மான் தலை தெறிக்க ஓடியது. குட்டியும் அதைத் தொடர்ந்தது. ஓரிடத்தில் அவை மறைந்து நின்றன.மானிடம் குட்டி, வீராப்பு பேசிய நீ ஓடி வந்தாயே? கொம்பின் பயன் இது தானா? என்று கேட்டது.மான், இப்போதும் சொல்கிறேன். நான் பலசாலி தான்! என் கொம்பும் சிறந்த ஆயுதமாக இருக்கிறது. ஆனாலும், வேடனை கண்டால் பயம் வந்து விடுகிறது. செய்வதறியாமல் கால் ஓட ஆரம்பிக்கிறது. நான் என்ன செய்யட்டும் என வருந்தியது.இந்த கொம்பன் போலமனிதர்களில் பலர் தைரியசாலி போல பேசினாலும், ஆபத்து காலத்தில் செய்வதறியாமல் திகைக்கிறார்கள். எந்தச் சூழலிலும் தைரியத்தை இழக்கக்கூடாது... புரிகிறதா..!
|
|
|
|