|
ஆயோத தவும்யர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்தில் உபமன்யு என்ற சீடன் இருந்தான். பசுக்களை மேய்ப்பதும், கிராமங்களுக்குச் சென்று பிச்சை ஏற்பதும்அவனது பணி. சீடர்கள்குருவுக்காகவும், தங்களுக்காகவும் பிச்சை ஏற்று சாப்பிடுவது அக்கால நடைமுறை. உணவுமுழுவதையும் சாப்பிட்ட குருநாதர், உபமன்யுவுக்கு சிறிதும் தர மறுத்தார். எனவே, தன் பசி தீர மக்களிடம் மீண்டும் பிச்சை ஏற்க வேண்டி வந்தது. இதை அறிந்த குரு, மீண்டும் பிச்சைக்கு சென்றால் ஊரார் சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். பிச்சைக்கு ஒருமுறை மட்டும் தான் செல்ல வேண்டும், என்று உத்தரவிட்டார். அதன்படி உபமன்யு ஒருமுறை மட்டும் பிச்சை ஏற்றான். குருநாதரோ தன்நிலையில் இருந்து மாறவில்லை. சாப்பிடாவிட்டாலும்,உபமன்யு இளைக்கவில்லை. ஒருநாள், உபமன்யு!உணவுக்காக என்ன செய்கிறாய்? என்றார் குரு.பசுவின் பாலைக்குடிக்கிறேன் என்றான்.பசுக்களுக்குச் சொந்தமான நான் அனுமதிக்காமல் பால் குடித்தது தவறு. இனி நீ பால் குடிக்கக்கூடாது என்றுகோபமாக சொன்னார் குருநாதர்.சரி..குருவே! என்றான் உபமன்யு.அதன் பின்னும் அவன் இளைக்கவில்லை. அதற்கான காரணம் கேட்ட போது, கன்றுக்குட்டியின் வாயில் வழியும் பால் நுரையைச் சாப்பிடுகிறேன், என்றான்.
கன்றுகுட்டிகள் தயாள குணம் உள்ளவை. வேண்டும் என்றே உனக்காக நிறைய பாலை நுரையாக வெளியே தள்ளி விடும். இனி அப்படி செய்தால் பாவத்திற்கு ஆளாவாய்! என்றார் குரு.அதன் பின், பசிக்காக எருக்கு இலைகளைச் சாப்பிட ஆரம்பித்தான். அதனால்,உபமன்யுவின் பார்வை கெட்டது. ஒருநாள் பசுக்களை மேய்த்த போது, காட்டிலுள்ள கிணற்றுக்குள் விழுந்தான். பொழுது சாய்ந்ததும், பசுக்கள் தாமாகவே ஆஸ்ரமத்தை அடைந்தன. உபமன்யு வராததால்,அவனைத் தேடி குரு காட்டிற்குச் சென்றார். உபமன்யு! உபமன்யு என்று குரல் கொடுத்தபடி நடந்தார். தழுதழுத்த குரலில்,குருவே! நான் கிணற்றுக்குள் விழுந்து கிடக்கிறேன் என்றான். கிணற்றுக்குள் கிடந்தஉபமன்யுவைக் காப்பாற்றினார். அப்போது, குருவே! பார்வை போனதால் இந்த கதிக்கு ஆளானேன் என்று அழுதான்.குருநாதர் தேவலோகவைத்தியர்களான அஸ்வினி குமாரர்களை வரவழைக்கும் மந்திரத்தை ஜெபித்தார். உடனே அஸ்வினிகுமாரர்கள் தோன்றி, இந்த அதிரசத்தைச் சாப்பிட்டால் பார்வை கிடைக்கும்என்று அவனிடம் கொடுத்தனர்.அரிதான இந்த மந்திர அதிரசத்தை குருவுக்கு கொடுக்காமல் எப்படிசாப்பிடுவது? என்றான் உபமன்யு.முன்பொரு காலத்தில் உன் குருநாதரிடம் அதிரசம் கொடுத்தபோது, தன்னுடைய குருவுக்கு கொடுக்காமல், அவரே சாப்பிட்டார் என்றனர்.அதற்கு உபமன்யு,மன்னியுங்கள். பெரியவர்களின் குறைகளை நாம் பொருட்படுத்தக் கூடாது என்றான். குருவுக்கு கொடுத்த பிறகே சாப்பிட்டான். அதிரச மகிமையால் பார்வை கிடைத்தது. அஸ்வினி தேவர்கள், குருபக்தியில் சிறந்த உபமன்யுவுக்கு ஆசியளித்தனர்.
|
|
|
|