|
குரு ஒருவரைத் தேடி வந்த இளைஞன் ஒருவன், சுவாமி! உலகில் அறிவைத் தரும் எண்ணற்ற நூல்கள் உள்ளன. அவற்றைப் படிப்போர் அறிவைப் பெற்று விடமுடியும்! ஆனால் வெறும் நூல்களைப் படிப்பதால் மட்டும் ஞானத்தைப் பெற்றுவிடமுடியாது என்று உங்களைப் போன்ற மகான்கள் கூறுகிறார்கள். அறிவுக்கும் ஞானத்துக்கும் என்ன வேறுபாடு? என்று கேட்டான். இளைஞன் சொன்னதைக் கேட்டு, குரு புன்னகையோடு பதில் சொன்னார். அறிவு என்பது உலகைப் பற்றி அறிந்துகொள்வது. ஞானம் என்பது இறையைப் பற்றிய முழுமையான அறிவு. அறிவை அறிந்துகொள்வதற்கு நீ ஒரு விளக்கைப் பயன்படுத்துவாய். ஆனால் ஞானம் பெற்று விட்டால் நீயே விளக்காக மாறி விடுவாய்! விளக்கம் பெற்ற இளைஞன், குருவிடம் ஆசி பெற்றான். |
|
|
|