|
சங்கீத மும்மூர்த்திகளில்ஒருவரான தியாகராஜ
சுவாமிகள் ராமபிரானின் அருள் பெற்றவர். ஒருமுறை அவர் ராமபிரானிடம் தனக்கு
மோட்சம் தர வேண்டினார்.ராமர் அவரிடம், ஞான, கர்ம யோகம் இல்லாத உமக்கு
மோட்சம் தர முடியாது எனச் சொல்லி விட்டார். தன் கோரிக்கையை
நிறைவேற்றும்படி, அவர் சீதையிடம் வேண்டுகோள் வைத்தார். அவரது வேண்டுதலை
கணவர் மூலம் நிறைவேற்றி வைக்க, சீதை எண்ணம் கொண்டாள். ஒருநாள் ராமனுக்கு
சீதை வெற்றிலை மடித்துக் கொடுத்த போது, அவரது வாய் சிவக்கவில்லை. மனைவி
மீது பிரியம் இருந்தால் தானே வாய் சிவக்கும் என்று சீதை செல்லமாகச்
சிணுங்க, ராமர் நடுங்கி விட்டார்.ஏன்! உன் மீதுள்ளபிரியத்தில் என்ன குறை
கண்டாய்? என்று கேட்க,இருவருக்குள்ளும் ஊடலே ஏற்பட்டு விட்டது. மனைவியின்
ஊடலைத் தீர்க்க ஏதாவது செய்தாக வேண்டுமே என்று சிந்தித்த ராமன், மீண்டும்
அவளை அணுகிய போது,என் மீது நிஜமான அன்பு இருந்தால் என் குழந்தைதியாகராஜனின்
கோரிக்கையை நிறைவேற்றுங்கள், என்றாள்.இதனால் தான் ராமர் கோவிலுக்கோ,
பெருமாள் கோவிலுக்கோ போனால்முதலில் தாயாரை வணங்கி கோரிக்கையை வைக்க
வேண்டும். பிறகு தான்சுவாமியைப் பார்க்க வேண்டும். நாம் பெருமாளிடம்
போவதற்குள் தாயார் நம் கோரிக்கையை சொல்லி அவருடைய அருளைப் பெற்று விடுவாள்.
அம்மாவின் அன்புக்குத் தான் எல்லை ஏது...! |
|
|
|