Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பொறுமை தந்த பெருமை!
 
பக்தி கதைகள்
பொறுமை தந்த பெருமை!

நரன், நாராயணர் என்ற ரிஷிகளை இணைத்துநர நாராயணர்என்பதுண்டு. இவர்கள் தவத்திலும், ஆயுதப்பயிற்சியிலும் இணையற்றவர் களாக இருந்தனர்.திருமால் நரசிம்மராக அவதாரமெடுத்து இரண்யனை கொன்ற பிறகு, பிரகலாதன் அரசுப் பொறுப்பேற்றான். அவனைக் காண சவனர் என்ற முனிவர் வந்தார். அவர் பல தீர்த்தங்களில் நீராடியவர். தீர்த்தமாடுவதின் அவசியத்தை பிரகலாதனுக்கு போதித்தார். இதையடுத்து பிரகலாதனும் தீர்த்தமாட புறப்பட்டான். வழியில் நர நாராயண முனிவர்கள் தோளில் வில்லுடன் தியானம் செய்வது கண்டு அதிசயித்தான். முனிவர்களே! நீங்கள் தபஸ்விகளாக இருந்தும், தவத்திற்கு சற்றும்பொருந்தாத ஆயுதங்களை வைத்திருப்பதேன்? என்று கேட்டான். அவர்கள், தபஸ்விக்கு வீரம் இருக்கக் கூடாதா? எங்களை வெல்ல யாராலும் இயலாது. வில்வித்தையில் நாங்கள் மிகவும் உயர்ந்தவர்கள். உனக்கு இதெல்லாம் எதற்கு? ஓடி விடு, என அடாவடியாக பேசினர். அவர்களின் அகங்காரத்தை ஒடுக்க எண்ணிய  பிரகலாதன், ரிஷிகளே! மரியாதையாக நான் சொல்வதைக் கேளுங்கள். ஆயுதங்களை துõர எறியுங்கள், என்று எச்சரித்தான்.அவர்களோ சற்றும் மடங்கவில்லை. அடேய் பிரகலாதா! நீ வந்த வழியைப் பார்த்துச் செல், எங்கள் பொறுமையைச் சோதிக்காதே. மீறினால், எங்கள் வில்லும் அம்பும் உன்னை பதம் பார்க்கும், என்று எச்சரித்தனர்.பிரகலாதனுக்கு கோபம் எகிறி விட்டது.

ரிஷிகளே! நான் ஒரு மன்னன். ரிஷிகளோ, சாதாரண பிரஜைகளோ... யாராக இருந்தாலும் ஒழுங்கு தவறி நடக்கும் போது, அதைக் காப்பது மன்னனின் கடமை. நீங்கள் என்னுடன் போருக்கு வாருங்கள். வெற்றி, தோல்வியை நிர்ணயித்த பிறகு மற்றதைப் பேசிக்கொள்ளலாம், என்றான்.நர நாராயண முனிவர்களுக்கும், பிரகலாதனுக்கும் பல காலம் யுத்தம் நடந்தது. வெற்றி தோல்வி என்பதே இல்லாத நிலையில், திருமால் அவர்கள் முன் தோன்றினார். அவர்கள் திருமாலைவணங்கினர்.முன்னொரு காலத்தில், நரநாராயணர் தவமிருந்த போது, அவர்கள் இந்திரலோகத்தை பிடித்து விடுவார் களோ என இந்திரன் பயந்தான். இதனால்,அவர்களின் தவத்துக்கு மழை, காற்று மற்றும் தேவமாதர்கள் மூலம் இடையூறுகளை ஏற்படுத்தினான். அதைக் கண்டு நரநாராயணர்அஞ்சவில்லை. நரமுனிவர், தன் தொடையை தட்டி ஒரு பெண்ணை உருவாக்கினார். அவள், அங்கு வந்த மற்ற அப்சரஸ்களின் அழகையெல்லாம் மிஞ்சி விட்டாள். இதுகண்டு மற்ற அப்சரஸ்கள் கண் கலங்கினர். தங்களை மகரிஷி சபித்து விடுவாரோ என்று அச்சம் கொண்டனர்.என்னதான் இருந்தாலும், ஒரு மகரிஷி இப்படிபொறுமையிழந்து சாதாரணமானவர்கள் செய்வது போன்று தொடையைத் தட்டி வீரம் காட்டி, ஒரு கன்னியை உருவாக்கலாமா? தபஸ்விகளுக்குரிய பொறுமையை இழந்து விட்டார்களே, என்று மற்ற முனிவர்கள் கேலி பேசினர். இதனால் அவர்களின் தவவலிமை அழிந்தது. இந்த சம்பவத்தை திருமால்  ஞாபகப்படுத்தினார். தவசீலர்களுக்கு பொறுமை வேண்டும் என அறிவுரை சொன்னார். தவசீலர்கள்பிரகலாதனை வாழ்த்தினர். ஆன்மிகம்மட்டுமல்ல... எந்த நோக்கத்தை எட்ட வேண்டுமானாலும் பொறுமை தேவை. அதுவே பெருமை தரும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar