Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தலையெழுத்தையே மாற்றலாம்!
 
பக்தி கதைகள்
தலையெழுத்தையே மாற்றலாம்!

இஇரு சோம்பேறி இளைஞர்கள் ஊரைச் சுற்றி வந்தனர். பசி தீர்க்க திருடுவதென முடிவு எடுத்தனர். முதலில் வீடுகளில் கிடைத்த சாமான்களைத் திருடினர். அவற்றை விற்ற பணம் அன்றைய செலவுக்கே சரியாக இருந்தது. எனவே, பெரிதாக கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர்.ஒருநாள் பண்ணையார் வீட்டில் திருடும் போது, பண்ணையாட்கள் அவர்களை கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களுக்கு பலே திருடன் என்னும் பொருள் தரும் விதமாக ப.தி. என்று நெற்றியில் பச்சை குத்தி தெருத் தெருவாக இழுத்து வந்தனர். ஒரு திருடன் அவமானம் தாங்காமல் விஷம் குடித்து இறந்தான். மற்றொருவனுக்கு கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் ப.தி. என்ற எழுத்துக்கள் நிம்மதியைக் கெடுத்தன. குற்ற உணர்ச்சியில் வெளியூருக்கு ஓடி விட்டான். அங்குள்ள கோவிலில் உள்ள சிவன் திருவடியில் அமர்ந்து, தான் செய்த திருட்டை எண்ணி கண்ணீர் சிந்தினான். புதிய வாழ்வு வாழ முடிவெடுத்தான். நேர்மையும், உண்மையும் இரு கண்களாகப் போற்றத் தொடங்கினான்.அந்த ஊரில் இருந்த பெரியவர் ஒருவர் அவனது நெற்றியில் இருக்கும் ப.தி. என்ற எழுத்தைக் கண்டு, அதற்கான காரணத்தைக் கேட்டார். உண்மையை மறைக்காமல் சொன்னான்.அவனது மனமாற்றம் கண்டு உருகிய பெரியவர், நீ ஒரு பக்தர் திலகம். அதையே ப.தி. என்று சுருக்கமாக பச்சை குத்த வைத்துள்ளான் இறைவன். மனம் திருந்தினால்தலையெழுத்து மாறிவிடும். எல்லாம் அவன்விளையாட்டு என்றார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar