|
துரியோதனனின் இருப்பிடம் நோக்கி சென்றார் கண்ணன். அங்கே விதுரர் வீட்டில் சாப்பிட்டார். துரியோதனனுக்கு கோபம்... பீஷ்மர் வீடு இருக்கிறது, துரோணர் வீடு இருக்கிறது... ராஜாதி ராஜனான என் வீடு இருக்கிறது... இதையெல்லாம் விட்டு, பதவியே வேண்டாமென உதறிவிட்டு, குடிசையிலே போய் இருக்கிற என் சித்தப்பா விதுரர் வீட்டுக்கு ஏன் போய் சாப்பிட்டாய்?” என்று கேட்டான்.கிருஷ்ணர் அழகாக பதில் சொன்னார்.என் பக்தர்கள் யாரோ அவர்கள் இல்லத்திலேயே நான் வாசம் செய்வேன். எனக்கும் நீ நேரடி விரோதியல்ல. ஆனால், என் பக்தர்களான பாண்டவர்களுக்கு பகைவன். என்னை பகைத்தால் கூட பரவாயில்லை... என் பக்தர்களைப் பகைத்தால் அவர்கள் இல்லத்தில் நான் சாப்பிட மாட்டேன்,” என்றார். தன்னை வணங்காதவர்களைப் பற்றிக் கூட கண்ணன் கவலைப்பட மாட்டான். ஆனால், தன் பக்தர்களுக்கு துன்பம் செய்வோரை மாயம் செய்து அழித்து விடுவான்.
|
|
|
|