|
கிருஷ்ணர் சாந்தீபனிமுனிவரின் குருகுலத்தில் படித்தார். படிப்பு முடிந்ததும், குருவுக்கு தட்சிணை கொடுக்க விரும்பினார். குரு கிருஷ்ணரிடம்,கிருஷ்ணா! என் ஒரே மகன் முன்பொரு நாள் கடலில் நீராடிய போது மூழ்கி விட்டான். அவனை உயிரோடு மீட்டுக் கொடுத்தால் மகிழ்வேன், என்று தன் எதிர்பார்ப்பைதெரிவித்தார்.நிச்சயமாக என்று கிருஷ்ணரும் வாக்களித்து விட்டு புறப்பட்டார். கடற்கரையில் நின்ற கிருஷ்ணர், சமுத்திர ராஜனே! சாந்தீபனி முனிவரின் மகனை உயிருடன் திருப்பிக் கொடு என்று வேண்டுகோள் விடுத்தார்.நேரில் தோன்றிய சமுத்திரராஜன், கிருஷ்ணா! இங்கு கடலின் அடியில் சங்கு வடிவில் பஞ்சனன் என்ற அசுரன் இருக்கிறான். அவனே சிறுவனைக் கொன்றான், என்று தெரிவித்தான். கடலுக்குள் மூழ்கிய கிருஷ்ணர், சங்கு வடிவில் கிடந்த பஞ்சனனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அன்று முதல் அந்த அசுரன் கிருஷ்ணரின் பாஞ்சஜன்யம் என்ற சங்காக விளங்கினான். அதை முழக்கிய போதெல்லாம் அவருக்கு வெற்றி உண்டானது. எமலோகம் சென்ற கிருஷ்ணர் சங்கநாதம் எழுப்பினார். அதைக் கேட்ட எமன் ஓடி வர அவனிடம் முனிவரின் மகனை திரும்ப ஒப்படைக்க கூறினார். எமனும் அவனை திருப்பித் தர கிருஷ்ணர் அவனை குருவிடம் ஒப்படைத்தார். கிருஷ்ணரின் சங்கு தரிசனம் போகிற உயிரைக் கூட காப்பாற்றும் வல்லமைஉடையது. |
|
|
|