|
கிருஷ்ணனின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு இடம் பிருந்தாவனம். பிருந்தா என்றால்துளசி. துளசிச் செடிகள் காடு போல் நிறைந்திருக்கும் இடங்களை இவ்வாறு அழைப்பர். பசுக்கள் மேயும் புல்வெளிகளும் இங்கு அதிகம். யமுனை நதிக்கரையில் அமைந்தது இந்த பகுதி. கோவர்த்தன மலையின் அடிவாரப் பகுதியாகவும் விளங்கியது.கம்சனால் அனுப்பப்பட்ட பல அசுரர்களை கிருஷ்ணன் கொன்று விட்டான். இருந்தாலும் கூட, வந்தவர்களெல்லாம் மாயாவிகளாக இருந்ததால், அவனுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று பயந்த கிருஷ்ணனின் வளர்ப்புத் தந்தை நந்தகோபரும், தாய் யசோதையும் அவ்வூர் பெரியவரான உபநந்தரிடம் யோசனை கேட்டனர்.
நாம் எல்லாரும் கோகுலத்தில் இருந்து பிருந்தாவனத்துக்கு இடம் பெயர்ந்து விடுவோம். நம் மாடுகள் மேயவும் புல்வெளிகள் அதிகமாக இருப்பதால், அது நாம் வசிக்க ஏற்ற பூமியாக உள்ளது. அங்கேசெல்வோமே! என்றார். எல்லாரும் அவரது யோசனையை ஏற்றனர்.பெண்கள், முதியவர்கள்,குழந்தைகள் வண்டிகளில்ஏறிக்கொள்ள மற்ற ஆண்கள் பாதுகாப்பாகவந்தனர். கிருஷ்ணனும், பலராமனும் அப்போதும் சேஷ்டை செய்துகொண்டே சென்றனர். இதை எல்லா கோபியர்களும் கண்டு ரசித்தனர்.பிருந்தாவனத்தில்கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதும் போது, அதை ரசிக்கும் மயில்கள் நாட்டியமாடும்.காட்டு மிருகங்கள் போலகுரல் எழுப்பி (மிமிக்ரி) தன் நண்பர்களை மகிழ்விப்பார் கிருஷ்ணன். பசுக்களும், காளைகளும் மோதுவது போல்கிருஷ்ணனும், பலராமனும் சண்டை செய்து ஒலி எழுப்புவர்.இப்படி அந்தக் காலத்திலேயே மிமிக்ரி கலைஞராக விளங்கினார் கிருஷ்ணர். |
|
|
|