|
கண்ணன் நமக்கு வாய், கண், காது என்றெல்லாம் தந்திருக்கிறான். இதில் கண்ணுக்கு இமை என்னும் மூடியும், வாய்க்கு உதடு என்ற மூடியையும் போட்டு வைத்திருக்கிறான்.பேசாதே என்றால் உதட்டின் மீது விரல்களை வைத்து சைகைகாட்டுகிறோம். பார்க்காதே என்றால் கண்ணை மூடிக் கொள்கிறோம். ஆனால், கேட்காதே என்றால் என்ன தான் காதில் பஞ்சை வைத்து அடைத்தாலும்,மெல்லியதாகவேனும் ஏதோ முணுமுணுப்பது போல் கேட்கிறது. பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார்.நான் மனிதவடிவில் இங்கு வந்து மக்களுடன் பழகுவதால், இந்த மூட ஆத்மாக்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. என் பெருமையை உணரவில்லை, என்கிறான். அதனால் தான் அவன் சொன்ன பகவத் கீதையை யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த கீதையின் சாரமாக அவனது காதலி ஆண்டாள் திருப்பாவை பாடியும் அதையும் பெரும்பாலானோர் அர்த்தம் புரிந்து கேட்பதாக இல்லை. இனியேனும் பகவத் கீதையை பொருள் புரிந்து கேளுங்கள்,கண்ணனின் பெருமையைக் கேளுங்கள். நல்லதையெல்லாம் கேளுங்கள். கலியுகத்தில் கெட்டதும் காதில் விழுகிறதே என்றால் அதுபற்றி கவலை கொள்ளாதீர்கள். நல்லவர்களுடன் எப்போதும்சேர்ந்திருந்தால் பெரும்பாலும் நல்லதே நாம் காதில் விழும். அதற்காகவே, கண்ணன் நமது காதுகள் இரண்டையும் திறந்தே வைத்திருக்கிறான். |
|
|
|