|
கண்ணனைக் கொல்ல நினைத்த கம்சன், பூதனை என்ற மந்திரவாதி அரக்கியை கோகுலத்திற்கு அனுப்பினான். அழகான பெண்ணாக உருமாறிய அந்த அரக்கி, கண்ணனின் வீட்டுக்குள் நுழைந்தாள். தாய்ப்பாலில் விஷம் தடவி அதை அவனுக்கு ஊட்டி கொல்வதே அரக்கியின் திட்டம். அப்போது கண்ணன் தொட்டிலில் படுத்திருந்தான். பூதனை அருகில்நெருங்கியதும் கண்களை மூடிக் கொண்டான். குழந்தையை கையில் எடுத்த பூதனை அவனை மடியில் இட்டு தாலாட்டினாள். கண்ணன் அப்போதும் கண் திறக்கவில்லை. அப்போது யசோதை அங்கு வந்தாள். அறிமுகம் இல்லாத ஒருத்தி தன் மகனை கையில் எடுத்து வைத்திருந்தாலும், அவளை தடுக்க இயலாமல் செயலற்று நின்றிருந்தாள். பூதனையின் அழகும், முகத்தில் இருந்த சாந்தமும் அவளை அவ்வாறு செய்ய இயலாமல் தடுத்து விட்டது. அப்போது பூதனை கண்ணனுக்குபாலுõட்டினாள். அப்போதும் கூட கண்விழிக்காத கண்ணன் பாலுடன் அவளது உயிரையும் சேர்த்துக் குடித்து விட்டான். பூதனை ஒரு பெண் என்பதாலும், தாய் போல பாலுõட்ட வந்ததாலும் அவளைக் கொல்லும் போது கண்ணன் கண்களை மூடிக் காண்டார். அது மட்டுமல்ல, விஷமாயினும், தனக்கு தாய்ப்பால் தர முன் வந்தவள் என்பதாலும், கம்சனால் ஏவி விடப்பட்ட ஒரு அம்பு என்பதாலும், அவளது பாவத்தை மன்னித்து பிறவா வரமும் வழங்கினார். |
|
|
|