Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உல்லாசம் உலகம் உனக்கே சொந்தம்!
 
பக்தி கதைகள்
உல்லாசம் உலகம் உனக்கே சொந்தம்!

சந்தேக புத்தி படைத்தவனின் அறிவு வேலை செய்வதில்லை. அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்வான். நம்மை நாமே அறிந்து பண்பட்ட மனதுடன் வாழ்ந்தால் உலகில் எப்போதும் உல்லாசமாக இருக்கலாம்.  ஏதுமறியாத பாமர மக்கள் பொருள் ஆசையின் காரணமாக, ஏதோ சில தொழில்களில்  ஈடுபடுகின்றனர். ஆனால், அறிவுடைய நல்லவர்கள் உலக நன்மை கருதிய தொழில்களையே தேர்ந்தெடுப்பர். உலகில் நடக்கும் எல்லாச் செயல்களும் இயற்கையின் தூண்டுதலால் நடக்கிறது. ஆனால், ஆணவத்தால் சில மனிதர்கள் தங்களால் தான் எல்லாமே நடப்பதாக தவறாக எண்ணிக் கொள்கிறார்கள். கடமையில் அக்கறையுடன் ஈடுபடு. ஆனால், பலனை மட்டும் என்னிடம் ஒப்படைத்து விடு. இப்படி பலன் கருதாமல் வாழ்ந்தால் ஒரு பாவமும் உன்னை நெருங்காது.

தன்னைப் போல எல்லா உயிர்களையும் எண்ணி வாழ்பவனே யோகி. அவனைப் போல உயர்ந்தவர் யாரும் உலகில் இல்லை.தலை, உடம்பு, கழுத்து மூன்றையும் நேராக வைத்து அசையாமல் அமர்ந்து கொள். மனதை ஒருமுகப்படுத்தி என்னிடம் செலுத்தி தியானம் செய்.அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது, சோம்பலால் எப்போதும் தூங்குவது, இரவில் தூங்காமல் விழிப்பது போன்றவற்றை தவிர்த்து விடு.கொழுந்து விட்டெரியும் நெருப்பு விறகுகளைக் கரியாக்குவது போல, ஞானம் என்னும் தீ, பாவ வினைகளைச் சுட்டு சாம்பலாகி விடும்.துன்பத்தை கண்டு மனம் கலங்காதவனும், இன்பத்தில் நிதானம் இழக்காதவனும், கோபத்திற்கு சிறிதும் இடம் கொடுக்காதவனும் எப்போதும் மனஉறுதியை இழப்பதில்லை.

உண்ணாமல் விரதம் இருந்தாலும், மனித மனம் உணவின் சுவையில் ஈடுபடவே செய்கிறது. ஆனால், கடவுளின் சிந்தனை ஆழமாகும் போது இத்தகைய சலனம் உண்டாகாது.கடவுள் ஒருவரே என்பதை உணர்ந்து என்னை (கிருஷ்ணரை) சரணடைவதோடு நெறி பிறழாமல் நல்வழியில் வாழ்பவன் பிறவிக் கடலில் இருந்து அவரை கரை சேர்ப்பது என் பொறுப்பு.மனதைக் கட்டுப்படுத்தி தனக்குத் தானே விதியை வகுத்துக் கொண்டு சரியான நெறியில் வாழ்பவன் எப்போதும் நிம்மதியுடன் இருப்பான்.ஆசை நிறைவேறாவிட்டால் கோபம் உண்டாகும். இதனால்இறுதியில், புத்தி தடுமாற்றம் ஏற்பட்டுஅறிவை இழந்து பிறருக்கு தீங்கு செய்ய நேரிடும்.இன்ப துன்பத்தை சமமாகக் கருதுவது, எல்லா உயிர்கள் மீதும் கருணை செலுத்துவது, அகந்தை சிறிதும் இன்றி பணிவுடன் நடப்பது ஆகிய குணங்களை பெற்றவன் சிறந்தவன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar