|
புத்தர் ஒரு கிராமத்துக்கு சென்றார். அவருடைய போதனைகளைக் கேட்டால் இல்லற எண்ணம் மாறி துறவற வாழ்க்கை மீது பற்று வந்து விடும் போல் இருக்கிறதே என மக்கள் பயந்தனர். அவரைக் கண்டபடி திட்டினர்.தன்னைத் திட்டியவர்களையும் கூட, அவர் வெறுப்பாக பார்க்கவில்லை. இது மக்களுக்கு வியப்பாக இருந்தது.பொறுமை இழந்த அவர்கள், உம்மை இவ்வளவு அவமானப்படுத்துகிறோமே! உமக்கு உரைக்கவே இல்லையா? என்று கேட்டனர்.எந்த வித சலனமும் இல்லாமல் புத்தர் பதில் அளித்தார்.
நான் நேற்று ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்கே உள்ள மக்கள் என்னை அன்போடும், மகிழ்ச்சியோடும் வரவேற்றனர். என் பசியை போக்க நிறைய பழம் கொடுத்தனர். ஆனால், அவற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களிடமே அதை திருப்பிக் கொடுத்து விட்டேன். அதே போல தான், நீங்கள் என்னை வஞ்சித்து பேசிய வார்த்தைகளையும் உங்களிடமே திருப்பி தந்து விட்டேன். எனக்கு சுவையான பழங்களும் ஒன்று தான், பழிச் சொற்களும் ஒன்று தான், என்றார்.மக்கள் பதில் பேசிய முடியாமல் மவுனமாக நின்றனர்.நாம் நல்வழியில் செல்லும் போது பாராட்டும் கிடைக்கும், அவமதிப்பும் உருவாகும். இந்த இரண்டையுமே நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. நம் கடமைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டியது தான்! |
|
|
|