|
குரு ஒருவர், சீடர்களே! உங்களுக்கு இனிநான் பாடம் நடத்தப் போவதில்லை. மவுனமாகவே இருந்து விடப்போகிறேன்! என்றார். இதனைக்கேட்ட சீடர்கள், குருவே! நீங்கள் மவுனமாக இருந்துவிட்டால், எங்களுக்கு எதையுமே உபதேசிக்க முடியாது. நாங்கள் எதையும் தங்களிடமிருந்து கற்கமுடியாது! என்றார்கள். அதற்கு குரு, ஆகாயம் பேசுகிறதோ? இல்லையே! என்றாலும் பருவகாலங்கள் தவறாமல் மாறி மாறி வருகின்றன. அல்லவா! இன்னும் அதில் வெவ்வேறான விஷயங்கள் சிருஷ்டிக்கப்படுகின்றன. அப்போதெல்லாம் வானம் பேசிக்கொண்டா இருக்கிறது? ஆடம்பரத்தால் சாதிக்க முடியாத காரியத்தைக்கூட அமைதி சாதித்துக்காட்டிவிடும்! என்றார். புதிய பாடம் கற்றனர் சீடர்கள். |
|
|
|