|
மகான் ஒருவன் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது ஆணவம் நிறைந்த படைத்தளபதி ஒருவன் எதிரே வந்தான். யார் நீ? என குருவை ஒருமையில் கேட்டான். இவ்வளவு ஆணவத்தோடு திரிகிறாயே, நீ யார்? என்றார் ஞானி. நான் அரசனின் நம்பிக்கைக்குரிய தளபதி, அரசனுக்குப் பசித்தால் நாம் உணவூட்டுவேன். அரசனுக்கு தாகம் எடுத்தால் தண்ணீர் தருவதும் நான்தான். எந்நேரமும் அரசனின் அனைத்துக் காரியங்களையும் நான்தான் கவனித்துக்கொள்கிறேன்! அவனது கர்வத்திற்கான காரணம் புரிந்த ஞானி, சரி, நீ அரசனின் அந்தரங்கத் தோழன்தான். ஆனால் நீ தவறு ஏதும் செய்துவிட்டால் அரசன் தண்டிப்பானா? ஆம்! தண்டனை நிச்சயம் உண்டு. பலமுறை கசையடி பெற்றுள்ளேன். உடனே ஞானி, அப்படியானால் நான் உன்னை விட மிகவும் அதிர்ஷ்டம் செய்தவன் நான் எந்த அரசனுக்கு அடிமையாக இருக்கிறேனோ, அவன் என் தவறுகளுக்காக தண்டிப்பதில்லை. மாறாக மன்னிக்கிறான். நான் பசியோடு இருக்கும்போது உணவு தருகிறான். எனக்கு தாகமென்றால் தண்ணீர் தருகிறான். அத்தகைய அரசனுக்கு அடிமையாக இருப்பது உண்மையிலேயே பெருமை! என்றார். இறைவனுக்கு அடிமையாக இருப்பவன் எல்லோருக்கும் அரசனாக இருக்கிறான்! என்பதை உணர்ந்தான், படைத்தளபதி. |
|
|
|