|
ஞானி ஒருவரிடம் வந்த ஒருவன், அய்யா! நான் கடவுளை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். தாங்கள்தான் எனக்கு வழிகாட்டவேண்டும்! என்று வணங்கினான். நீ யாரையாவது நேசித்திருக்கிறாயா? என்று கேட்டார் ஞானி இல்லை! யாரையுமே நான் நேசித்ததில்லை. காரணம் நான் ஒரு பிரம்மச்சாரி. கடவுளை அறிவது ஒன்றே எனது குறிக்கோள்! என்றான். அன்பு, நேசம் போன்றவற்றை ஒருவன் கண நேரமாவது அனுபவித்து இருந்தால் மட்டுமே, அந்தக் குணத்தை வளர்த்து, அன்பின் சொரூபமான கடவுளை அடைய வழிகாட்ட முடியும். ஆனால் அவற்றை அறியா உனக்கு உதவ முடியாது! என ஞானி சொல்ல, அன்பும், நேசமும், பரிவுமே இறைவனை அறிவதற்கான வழி என்பதை உணர்ந்தான் அவன். |
|
|
|