|
துறவியிடம் சீடன் ஒருவன், குருவே! இறைவன் ஒருவன் என்னும் பொழுது இந்து மதத்தில் இத்தனை கடவுள்கள் ஏன்? எனக்கேட்டான். சீடனே! நீ ஒருவனே! ஆனால், நீ அன்னைக்குப் பிள்ளை, பிள்ளைக்குத் தந்தை, பேரர்க்குப் பாட்டன். மாமிக்கு, மருமகன், மனைவிக்கும் கணவன், தம்பிக்கு அண்ணன் என உனக்கே இத்தனை வடிவம் இருக்கும்போது இறைவனுக்கேனப்பா இருக்கக்கூடாது? சீடன், உண்மையை உணர்ந்தான். |
|
|
|