|
ஒருவன் சர்க்கரைப் பொம்மை, துணி பொம்மை மற்றும் கல் பொம்மை மூன்றையும் தண்ணீரில் மூழ்கடிக்கிறான். பொம்மைகள் மனிதர்களையும் நீர் ஆன்மிக ஞானத்தையும் குறிக்கும். சர்க்கரைப் பொம்மை நீரில் முற்றிலும் கரைந்து போகிறது. ஞானியின் நிலை இதுதான். அவன் இறைவனில் ஒன்றி விடுகிறான். தான் என்ற நினைவை அறவே இழந்து விடுகிறான். துணி பொம்மை நீரை உறிஞ்சிக் கொண்டு முழுவதும் ஈரமாகி விடுகிறது. ஆனால் தன் வடிவை இழப்பதில்லை. அதேபோல் பக்தன் தானாகவே இருந்துக்கொண்டு இறைவன் நினைவில் ஊறியிருக்கிறான். அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் கடவுளுக்கே அர்ப்பிக்கிறான். உலக வாழ்க்கையில் திளைத்திருப்பவன் கல் பொம்மை போன்றவன் கல், நீரை உறிஞ்சாததுபோல் இவனும் இறைஞானம் தன் உள்ளத்தில் நுழையவே அனுமதிப்பதில்லை. |
|
|
|