|
இராமனும், சந்திரனும் சந்திக்கிறார்கள். சந்திரன் இராமனைப் பார்த்து, உன்னைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் சூரியன் தொடர்பு கொண்டதாகவே உள்ளன. நீ சூரிய வம்சத்தில், சூரியன் உச்சியில் இருந்த சமயம் அவதரித்தாய்: சூரிய குமாரனான சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தாய். இராவணனை சம்ஹரிக்க சூரியன் தயவு வேண்டி ஆதித்ய ஹ்ருதயம் சொன்னாய் என் சம்பந்தம் ஒன்றுமே உனக்கு இல்லையே என்று கேட்கிறான். அதற்கு இராமன் கவலைப்படாதே, அடுத்த அவதாரத்தில் சந்திர வம்சத்தில் பிறப்பேன். நீ பிரகாசிக்கும் பவுர்ணமியன்று ராசக்கிரீடை முதலியன செய்வேன் என்கிறார். உன் அடுத்த பிறவி வரை என்றால் காத்திருக்க முடியாது. அதனால் இப்போதே ஏதாவது செய்தாக வேண்டும் என்று சந்திரன் கேட்கிறான். அதற்கு இராமன் வசிஷ்டர் எனக்கு வைத்த பெயர் இராமன், இனி, உன் பெயரையும் சேர்த்துக் கொண்டு இராமச்சந்திரனாக விளங்குவேன் என்றார். |
|
|
|