|
அந்த குருகுலத்தில் பல சீடர்கள் இருந்தனர். அனைவரும் ஆர்வமாக எல்லாவற்றையும் கற்றுவர, ஒரு சீடன் மட்டும் கவலையோடு இருந்தான். துறவி அவனை அழைத்து விசாரித்தார். குருவே! எல்லோரும் என்னை கிண்டால், கேலி செய்கின்றனர். தாங்க முடியவில்லை. கோபம் தலைக்கேறுகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை! என்றான். இந்தக் கிணற்றின் கைப்பிடி சுவர் மீது ஏறி பத்துமுறை சுற்றிவா! என்றார் குரு. குரு எதற்காக அப்படிச் சொல்கிறார் எனத் தெரியாவிட்டாலும், குருவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, கவனமாக கிணற்றுச்சுவரில், ஏறி, சிரத்தையுடன் பத்துமுறை வலம் வந்தான். சீடன். நீ கிணற்றுச் சுவரில் ஏறி நடந்தபோதுகூட உன்னை பலர் கிண்டல் செய்தார்களே, அதைக் கேட்டாயா? என்றார். குரு. இல்லை குருவே! சுற்றி வரவேண்டும் என ஒரே கருத்தோடு இருந்தேன். யார் பேசியதும் கேட்கவில்லை! என்றான். ஒரு செயலில் மிக கவனமாக, உண்மையாக நாம் ஈடுபட்டிருக்கும்போது, பிறர் சொல்லும் வார்த்தை நமக்கு கேட்காது, புரிகிறதா? என்றார். சீடனுக்கு எல்லாம் புரிந்தது! |
|
|
|