|
கிருபானந்தவாரியாரின் ஆன்மிக சொற்பொழிவு திருவாரூரில் நடந்தது. அக்கூட்டத்திற்கு வந்த ஒரு பக்தர், வாரியாருக்கு அணிவிக்க மாலை வாங்கி வந்திருந்தார். வாரியார் கழுத்தில் ஏற்கெனவே மாலை கிடப்பதைப் பார்த்து, என்ன செய்வது என விழித்துக் கொண்டிருந்தார். இதை கவனித்த வாரியார், தனது கழுத்தில் கிடந்த மாலையைக் கழற்றி பக்கத்திலிருந்த சிறுவனுக்கு கொடுத்தார். வெறும் கழுத்தோடு இருந்த வாரியாரை பார்த்ததும், அந்த பக்தர் ஓடிப்போய் மாலை அணிவித்தார். வாரியார் சிரித்தபடியே, எப்போதுமே, நாம் நம்மிடமிருப்பதை பிறருக்குக் கொடுத்தால்தான், அடுத்தவர்கள் நமக்கு கொடுப்பார்கள் என்பதை நேரில் பார்த்து புரிந்து கொண்டீர்களா! என்றதும், கூட்டம் கைதட்டி ஆமோதித்தது. |
|
|
|