|
பெரிய பங்காள ஒன்றின் ஆடம்பரமான அறையின் நடுவே பெரிய மீன் தொட்டி இருந்தது. இரண்டு தங்கநிற மீன்கள் அதில் நீந்திக் கொண்டிருந்தன. அதில் ஒரு தங்க மீன் சொன்னது, சே! என்ன வாழ்க்கை இது! இந்தத் தொட்டியிலேயே காலம் பூராவும் குறுக்கும் நெடுக்குமாய் நீந்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறதே! இதைப் பார்க்கும்போது கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா? என்கிற சந்தேகம் வருகிறது என்றது. இன்னொரு தங்க மீன் உடனே சொன்னது, கடவுள் இல்லை என்கிறாயே! அப்படியானால் தினமும் இந்தத் தொட்டியில் நமக்காக தண்ணீரை யார் மாற்றுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். |
|
|
|