|
ஒரு துறவியை சந்தித்து ஒருவன், சுவாமி! ஆசைவசப்பட்ட மனிதனின் நிலை என்ன? என்று கேட்டான். ஆகாரத்தில் விருப்பமுள்ள மீன், இரையால் மறைக்கப்பட்டிருக்கும் இரும்புத் தூண்டிலை கவனிப்பதில்லை. ஆசைப்பட்டு ஆகாரத்தைத் தின்னப்போய் அது ஆபத்தில் மாட்டிக்கொள்கிறது. ஆசை வசப்பட்ட மனிதனின் நிலையும் இதுபோலத்தான் ஆகிறது! என்றார் துறவி. |
|
|
|