|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அன்னதானம் செய்யலாமா? |
|
பக்தி கதைகள்
|
|
விதர்ப்ப தேசத்தில் பெரும் தவசியான வித்யாரண்யர். இவர் மகாலட்சுமி குறித்து உருக்கமாக தவம் செய்தார். அவரது ஒரே நோக்கம் தரித்திரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிற ஆசை அதற்கு பெரும் செல்வம் வேண்டும் என்பது அவர் நெடுநாட்களாக தவம் செய்தார். ஒருநாள் மகாலட்சுமி இவரது கனவில் தோன்றி தவசீலரே உமது எண்ணம் இந்தப் பிறவியில் கை கூடாது. ஆசையை அடக்கிக் கொள். அடுத்த ஜன்மத்தில் உன் ஆவலை நிறைவேற்றி வைக்கிறேன் என்று சொல்லி மறைந்து விட்டாள். தவசியான வித்யாரண்யருக்கு பெரும் ஏமாற்றம் எப்படியாவது இந்த பிறவியிலிலேயே குபேர வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதே நோக்கம். ஒரு குறுக்கு வழி புலனாகியது ஒரு மனிதன் தான் வாழும் காலத்தில் துறவறம் மேற்கொண்டால் அது அவன் வரையில் அடுத்த பிறப்பாகும். இதை சாஸ்திரங்களும் ஆமோதிக்கின்றன. வித்யாரண்யரும் துறவறம் பூண்டார். பிறகு மகாலட்சுமியை குறித்து தவம் செய்து தாயே நான் இப்பொழுது தவசீலர் இல்லை.
நான் ஒரு துறவி எனக்கு மறுபிறவி என்பதைப் போல் மாறி விட்டேன். ஆகையால் எனக்கு பொன் பொருட்களை அள்ளித்தா? என்று முறையிட்டான். அதை கேட்ட மகாலட்சுமி மலைபோல செல்வம் அவ்வளவும் தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் வாரி வழங்கினாள். வித்யாரண்யர் நான் இந்தப் பிறப்பிலேயே சாதித்து விட்டேன். பார்த்தாயா என்றும் மகாலட்சுமியாகிய உன்னை நான் என் வழிக்கு கொண்டு வந்து விட்டேன். பார்த்தாயா என்றும் சொல்லி சிரித்தார். உடனே மகாலட்சுமி தோன்றி, அவரைவிடப் பெரிதாகச் சிரித்தார். வித்ராண்யா இப்போது நீயோ ஒரு துறவி அதாவது முற்றும் துறந்தவன். ஒரு துறவியின் கர்மப்படி இதை தீண்டக் கூடாதே? என்று கேட்டாள்.
அப்போது தான் வித்யாரண்யருக்கு தன் ஆசைக்கு அளவில்லாமல் போனதும் தெரிகிறது. அவ்வளவு நிதியை என்ன செய்யலாம். நாம் தொடக்கூடாது. அதனால் நாம் மற்றவர்கள் உதவி கொண்டு ஒரு அன்னதானம் செய்யலாமா என்று மகாலட்சுமியிடம் தாழ்ந்து வணங்கி கேட்டான். தனக்காகக் கேட்டுப் பெற்ற பொருளை மற்றவர்களுக்கு பயன்பட இருக்கும் அன்னதான திட்டத்தை துவங்கினான். அதற்கு மகாலட்சுமியோ வித்யாரண்யா நீ உமக்கு வேண்டும் என்று தான் கேட்டாய் மற்றவர்களுக்கு உதவும் உமது நல்ல அன்னதான திட்டத்தை செயல்படுத்து. உமக்கும் உம்மை சேர்ந்தவர்களுக்கும் அன்னதான திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து மக்களுக்கும் நான் அங்கேயிருந்து இதை முன்னின்று செய்வேன். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பது வாசகம். தன் சுயபுகழுக்காக பெற்ற செல்வம் பொது நலத்திற்காக செலவிடுவதே கோடான கோடி தர்மம். |
|
|
|
|