|
ஒரு குளக்கரையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் சென்று கொண்டிருந்தார். அவரைக் கண்ட ஒரு பக்தர், குருதேவா! பக்தி மார்க்கத்தில் வெற்றி பெற விரும்புகிறேன். வழிகாட்டுங்கள் என்று வேண்டினார்.இதோ... இங்கு மீன் பிடிக்க துõண்டில் போடுபவனைப் பார். தினமும் இங்கு வந்து என்ன நடக்கிறது என்று கவனி, என்று சொல்லி விட்டுப் போனார்.நான்கு நாள் தொடர்ந்து வந்த பக்தர், துõண்டில் போடுபவதை உன்னிப்பாக கவனித்தார். பின் ராமகிருஷ்ணரைக் காணச் சென்றார். குருதேவா! துõண்டில் போடுவதை நான்குநாள் பார்த்து விட்டேன். இப்போதாவது வழி சொல்லுங்கள் என்றார். அது தான் வழி கிடைத்திருக்குமே.... இனி நான் காட்ட என்ன இருக்கிறது? என்றார் ராமகிருஷ்ணர். இதுகேட்டு விழித்தார் பக்தர். அவரிடம் ராமகிருஷ்ணர்,மீன் பிடிப்பவனின் கவனம் எப்போதும் துõண்டிலேயே இருந்திருக்கும். யார் பேச்சு கொடுத்தாலும், என்ன செய்தாலும் அவனது கண் துõண்டில் மீதே இருந்திருக்கும். வெயிலில் காய்ந்தாலும் அவன் சிறிதும் கவலைப்பட்டிருக்க மாட்டான். மீன் சிக்கியதும் கரையில் இழுத்துப் போட்டு சந்தோஷப்பட்டிருப்பான் இல்லையா.... என்றார்.ஆமாம்....குருதேவா... அது தான் அங்கு நடந்தது என்றார் பக்தர். இது போலவே, உலக வாழ்வில் ஈடுபட்டாலும், ஆழ் மனதில் கடவுள் சிந்தனை இருக்க வேண்டும். பக்தியில் வெல்ல இதுவே வழி,என்றார் ராமகிருஷ்ணர். |
|
|
|