|
ஒரு பக்தர் தினம் தம் வீட்டிற்கு வருபவர்களுக்கு அன்னம் அளித்து வந்தார். ஒருநாள் வயோதிகர் ஒருவர் தள்ளாடியபடியே! அவர் வீட்டிற்கு வந்தார். வயோதிகர் கை, கால் அலம்பாமல் சாப்பிட அமர்ந்து விட்டார். கிழவரை கை, கால், அலம்பிவிட்டு பிரார்த்தனை செய்துவிட்டு, சாப்பிடும்படி கூறினார். பக்தர். ஆனால் அவரோ லட்சியம் செய்யாமல் சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டார். அன்றிரவு பக்தர் கனவில் வந்த கடவுள், இதுநாள் வரை கிழவருக்கு யார் அன்னம் அளித்தார்கள்? என்று கேட்டார். எல்லாம் தங்கள் அருள்! என்றார் பக்தர். அவருக்கு இதுநாள் வரை நான் ஒரு நிபந்தனையும் விதிக்கவில்லையே, ஒரு நாள் சாப்பாடு போட்டதற்கு, நிபந்தனை விதித்தாயே ஏன்? என்றார் கடவுள். பக்தர், கடவுளிடம் மன்னிப்புக் கேட்டார். அன்பிற்கு நிபந்தனை ஏது? |
|
|
|