|
ஒரு சமயம் பவுத்த மடாலயத்தில் துறவியொருவர் தம் சீடர்களுடன் தியானத்திலிருந்தபோது நில நடுக்கம் ஏற்பட்டது. சிஷ்யர்கள் உடனே வெளியில் ஓடினார்கள். ஆனால், குரு மட்டும் இடத்தைவிட்டு அசையாமல் தியானத்தில் மூழ்கியிருந்தார். சில வினாடிகளில் பூகம்பம் நின்றது. சிஷ்யர்கள் மடத்தில் உள்ளே வந்து, அமைதியாக அமர்ந்திருந்த குருவைப் பார்த்து, பூகம்பம் வந்தபோது தாங்கள் ஏன் ஓடவில்லை? என்று வினவினார்கள். நானும் ஓடினேனே! என்றார் குரு. சீடர்கள் புரியாமல் விழித்தனர். குரு சொன்னார்: நீங்கள் பூகம்பத்தில் மடாலயம் விழுந்து விடலாம். என்று அஞ்சி வெளியில் ஓடினீர்கள். நானோ என்றிருந்தாலும் விழுந்துவிடும் இந்த உடலை இயற்கை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்று வெளியிலிருந்து உள்ளே அதாவது, என் அகத்தின் உள்ளே தியான நிலையை நோக்கி ஓடினேன்; ஏனெனில், அங்குதான் உண்மையான பாதுகாப்பு உள்ளது என்று விளக்கினார். சீடர்கள் தெளிவடைந்தனர். |
|
|
|