|
ஒரு பெற்றோர் தங்கள் மகனிடம், ஒழுக்கமாக இரு, நன்றாகப்படி, பொய் பேசாதே; கெட்ட பையன்களுடன் சேராதே, தொலைக்காட்சி பார்க்காதே... என்று அடிக்கடி புத்திமதி சொல்லி வந்தனர். சிறுவனுக்கோ எரிச்சல், சே... என்ன பெற்றோர் இவர்கள்? உபதேசம் செய்வதே இவர்களுக்கு வேலையா போச்சு..! என்று நினைத்தான். சில நாட்களில் பெற்றோரை வெறுத்தும் விட்டான்.ஒருமுறை அந்த இளைஞனுக்கு கடுமையான காய்ச்சல் வந்தது. பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த நர்ஸ்கள், அவனிடம் அன்பாக பேசி மருந்து கொடுத்தனர். சரியான நேரத்திற்கு உணவு ஊட்டினர். தன்னை நன்றாக கவனித்துக்கொண்ட நர்ஸ்களை இளைஞனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இரண்டு நாட்களில் அவனுக்கு காய்ச்சல் குணமாகி வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். அப்போது, அவன் தன் பெற்றோரிடம், இந்த மருத்துவமனையில் நர்ஸ்கள் அன்பு செலுத்தியதைப் போல, நீங்கள் என் மீது அன்பு செலுத்துவதில்லையே, என்றான். அவர்கள் அமைதியாக சிரித்தனர்.அப்போது நர்ஸ் ஒருவர் வந்து, அவனது தந்தையிடம் பில்லை நீட்டினார். என்ன அப்பா இது? என்றான் இளைஞன். அவர் மகனிடம், உன் மேல் நர்ஸ்கள் அன்பு காட்டினார்களே...அதற்கான விலை இது என்றார். இளைஞன் அமைதியாகிவிட்டான். |
|
|
|