|
குருகுலத்தில் குரு சீடர்களுக்கு பாடம் நடத்தி முடித்ததும், பாடத்தில் சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்றார். ஒரு சீடன், நாம் காணும் இந்த உலகம் நல்லதா? இல்லை கெட்டதா? என்று கேட்டான். அவர் அந்த சீடனிடம் எதிர்க்கேள்வியாக, நீ பூனையை பார்த்திருப்பாய் அல்லவா? அதன் பல்லால் நன்மையா; தீமையா? என்று கேட்டார்.தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், இப்படி எதையோ கேட்கிறாரே? என்று குழப்பத்துடன் விழித்தான் சீடன். அவனது தவிப்பை புரிந்து கொண்ட குருவே இதற்கு பதிலளித்தார். தாய்ப்பூனையின் பற்கள் கருணையின் இருப்பிடம். ஏனென்றால், குட்டி தாயைச் சார்ந்து இருக்கும்போது, தன் பல்லாலேயே மென்மையாகக் கவ்வி துõக்கிச் செல்லும். ஆனால், எலிக்கு அதன் பற்கள் விரோதி. இது தான் உன் கேள்விக்கும் பதில். எதுவுமே நல்லது தான். அதே நேரம் எதுவுமே கெட்டது தான். அவரவரைப் பொறுத்து, நன்மையும் தீமையும் மாறிக் கொண்டேயிருக்கும். அதுபோல, உலகம் என்பது, நாம் நடந்து கொள்வதைப் பொறுத்து நல்லதாகவும் கெட்டதாகவும் காட்சியளிக்கும், என்றார்.சீடனுக்கு குருவின் பதிலும் புரிந்தது. உலக நடப்பும் புரிந்தது. |
|
|
|