Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » முகமூடித் திருடன்
 
பக்தி கதைகள்
முகமூடித் திருடன்

முகமூடித் திருடன் ஒருவன், ஏமாற்று வித்தை செய்து கொள்ளையடிப்பான். அதேநேரம், தன்னை யாரும் ஏமாற்ற முடியாது என்று இறுமாப்பு கொண்டிருந்தான். ஒருநாள் இரவு ஏராளமான தங்க நகைகளைக் கொள்ளையடித்து விட்டு வந்து கொண்டிருந்தான். பொழுது புலர்ந்தது. காட்டுப் பாதையில் நீண்ட துõரம் பயணித்ததால், அவன் களைத்துப் போயிருந்தான். வழியில் குளம் ஒன்று தென்பட, அதன் கரையில் நின்றான். திருடனை அடிக்கடி காட்டுப் பாதையில், நோட்டமிட்ட சிறுவன் ஒருவன், குளத்தில் ஏதோ தேடுவது போல நடித்தான் . அதை உண்மை என்று நம்பிய திருடன், தம்பி.... இங்கு என்ன தேடுகிறாய்? என்றான் திருடன்.குளிப்பதற்காக வந்த இடத்தில், என்னுடைய புது மோதிரம் தண்ணீருக்குள் விழுந்து விட்டது, என்று சொல்லி அழுதான் சிறுவன். அவன் பேச்சை உண்மை என்று நம்பிய திருடன், அதை அபகரிக்க திட்டமிட்டான். தம்பி... கவலைப்படாதே! உனக்காக நானே தண்ணீருக்குள் தேடி வருகிறேன் என்று சொல்லி விட்டு, தன்னிடம் உள்ள நகை பொட்டலத்தை அவன் கையில் கொடுத்து விட்டு, நீருக்குள் தேட ஆரம்பித்தான். இது தான் சமயம் என்று சிறுவன் கண் சிமிட்டும் நேரத்திற்குள் காட்டுப் பாதையில் ஓடி மறைந்தான்.எங்கு தேடியும் திருடனால் சிறுவனை கண்டு பிடிக்க முடியவில்லை. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்ந்த திருடனின் அகம்பாவம் நீங்கியது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar