Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இப்படியும் ஒரு மேல்நாட்டுச் சீடர்!
 
பக்தி கதைகள்
இப்படியும் ஒரு மேல்நாட்டுச் சீடர்!

அமெரிக்காவிலிருந்து சுவாமி விவேகானந்தர் தாய்நாடு திரும்பி இருந்த சமயம், அவர் ஆலம்பஜார் படித்துறையில் கங்கையில் நண்பர்களுடன் நீராடினார். நீராடிவிட்டுப் படியேறி வந்த அவரது கால்களில் மண் ஒட்டியிருந்தது. அவரது கமண்டலம் மற்றும் காலணிகளை ஏந்திக் காத்திருந்த அந்தச் சீடர் விரைந்து சென்று சுவாமிஜியின் பாதங்களைக் கமண்டல நீரால் கழுவி, தனது சால்வையால் ஈரம் போகத் துடைத்தார். சுவாமிஜி காலணிகளை அணிய உதவினார். சுற்றியிருந்தவர்கள் வியப்பில் மலைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தனர். ஏன்? சுவாமிஜிக்கு இப்படி பக்தியுடன் சேவை செய்தவர் ஒரு வெள்ளைக்காரச் சீடர்! ஜே.ஜே. குட்வின்! தேவை, ஒரு வாரத்தில் பல மணி நேரம் வேகமாக, சுருக்கெழுத்து எழுதக்கூடிய எழுத்தர். முகவரி 228 மேற்கு 39 வது தெரு இந்த விளம்பரம் சுருக்கெழுத்தாளர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஒன்றுதான்.

ஐந்தே வார்த்தைகளில் உலகை வென்ற சுவாமி விவேகானந்தரின் சார்பாக வெளியிடப்பட்டது. இந்த மூன்று வரி விளம்பரம் ஆனால் இது ஒருவருக்கு மட்டும் அவரது வாழ்க்கையயே மாற்றக்கூடிய அழைப்பாக அமைந்தது. அவர்தான் ஜே.ஜே. குட்வின். வியாசருக்கு ஒரு கணபதி. ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ஒரு ம. சுவாமி விவேகானந்தருக்கோ ஒரு குட்வின் மேல்நாடுகளில் சுவாமிஜி சுடர்விட்டுப் பிரகாசித்த முக்கியமான காலகட்டத்தில் அவரது அற்புதமான சொற்பொழிவுகளைச் சுருக்கெழுத்தில் எழுதி, தட்டச்சு செய்து அச்சிட உதவிய குட்வின் ஒட்டுமொத்த உலகிற்கான ஓர் உன்னத பணியைச் செய்தவர்.

குட்வின் சுவாமிஜியைச் சந்திக்கும்வரை இலக்கற்றவராகத் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். மகிழ்ச்சியைப் பெற மலிவானவற்றில் விருப்பு என வாழ்நாட்கள் ஓடின. அவருடைய வாழ்விலும் ஒரு நாள் மாற்றம் வந்தது. ஆம், அது சுவாமிஜியின் சுருக்கெழுத்தாளர் பதவிக்கான நேர்காணல் தினம். குட்வின் நேர்காணலில் வேலையை வென்றார். சுவாமிஜி அவருடைய இதயத்தை வென்றார். பிறந்ததிருலிருந்தே வறுமையின் குழந்தையாகவே வளர்ந்த நான் எங்கெங்கோ சென்றேன். எவ்வளவோ பேரிடம் பழகினேன். அமெரிக்காவில் சுவாமிஜியைச் சந்தித்த போதுதான் அன்பு என்றால் என்ன என்று கண்டு கொண்டேன். அவரது ஆளுமையினால் நான் முழுமையாக வசீகரிக்கப்பட்டேன். ஒருவன் தனது சொந்தமாகக் கருதும் ஒரு புனித ஜீவனை அதுவரை நான் எங்கும் பார்த்ததே இல்லை என்றார் குட்வின்.

சுவாமிஜியின் சொற்பொழிவு அட்டவணை கடினமானது. திங்கள், புதன், சனி நாட்களில் காலை 11 முதல் இரவு 8 மணி வரை சொற்பொழிவு. சுவாமிஜி பேசுவார். குட்வின் அதைச் சுருக்கெழுத்தில் குறித்த பிறகு டைப் செய்வார். சுவாமிஜி குட்வினின் மேலாண்மைத் திறமையைப் பெரிதும் பாராட்டுவார். வேதாந்த இயக்கம் மேலைநாடுகளில் தழைக்கும் என்று குட்வின் கூறியதைக் கேட்டு அவர் அகமகிழ்ந்தார். உரையாற்றும்போது சுவாமிஜியின் மனம் மிக உயர்ந்த தளத்தில் இருக்கும் தான் எப்படிப் பேசினோம் என்ற உணர்வே அவருக்கு இருக்காது. அந்த மாதிரி நேரங்களில் குட்வின் சுவாமிஜி இன்று மிக நன்றாக உரையாற்றினீர்கள் என்பார். உடனே சுவாமிஜி என்ன பேசினேன் என ஒரு குழந்தையைப் போலக் கேட்டு தமது பேச்சின் சாராம்சத்தை குட்வினிடமிருந்து அறிந்து கொள்வார் நல்லது. இதையெல்லாம் எழுதி வைத்துக்கொள் என்று மகிழ்ச்சியுடன் சொல்வார்.

1896 பிப்ரவரியில் நியூயார்க்கில் சுவாமிஜி குட்வினுக்குப் பிரம்மசரிய தீக்ஷை அளித்தார்  . இரண்டு மாதங்களுக்கு முன் உலகின் மீது விரக்தியும் வெறுப்பும் நிறைந்து சுவாமிஜியின் முன் தோன்றிய குட்வின் புதுப்பிறவி எடுத்தார். ஏப்ரல் 15, 1896 சுõவமிஜியும் குட்வினும் இங்கிலாந்திற்குப் பயணமானார்கள். அங்கு ஒரு கடமையுள்ள மகனாக குட்வின் தன் தாயைப் பார்க்கச் சென்றார். இங்கிலாந்திலும் சுவாமிஜி மற்றும் குட்வினின் கடும்பணி தொடர்ந்தது. உண்மை மற்றும் தோன்றும் மனிதன் போன்ற சுவாமிஜியின் பிரபல உரைகள் அங்குதான் உலகிற்கு அளிக்கப்பட்டன. அந்தச் சமயத்தில் குட்வின் அவரது உரைகள் அடங்கிய ஏழு சுருக்கெழுத்து நோட்டுக்களை வைத்திருந்தார். இங்கிலாந்தில் சுவாமிஜி எனும் ராஜரிஷியை, சூறாவளித் துறவியை, விளையாட்டுப் பிள்ளையாகவும் அணுக்கத்தில் காணும் அற்புத பாக்கியம் அவருக்கு வாய்த்தது. சில சமயங்களில் குட்வினின் ராஜ பக்திக்கும் சுவாமிஜியின் தேச பக்திக்கும் மோதல் வரும். அப்போதெல்லாம் சுவாமிஜியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அவரை வணங்கி சுவாமிஜி இந்த குட்வின் உங்கள் சீடன், வேலைக்காரன் என்னை எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் தயவுசெய்து ராஜகுடும்பத்தைப் பற்றி ஒன்றும் சொல்லாதீர்கள். என் மீது கருணை கொள்ளுங்கள் என்று சரணாகதி அடைவார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar