|
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை பின்வருமாறு குறிப்பிட்டார். வேதாந்தக் கொள்கைகளின் முடிவுகள் வியக்கத்தக்க அளவில் பகுத்தறிவுக்கு ஒத்திருப்பதாக மேலைநாட்டின் தற்போதைய தலைசிறந்த விஞ்ஞானிகள் என்னிடம் கூறினர். அப்படிப்பட்ட விஞ்ஞானிகளில் ஒருவரை, உண்ணக் கூட நேரமின்றி சோதானைக்கூடத்தில் தொடர்ந்து 72 மணி நேரம் பணியாற்றும் ஒரு மேதையை நான் நன்கு அறிவேன். அவர் உட்கார இடமில்லாமல் மணிக்கணக்காக நின்று கொண்டே எனது உரையைக் கேட்டவர். தற்கால விஞ்ஞான முடிவுகளும் வேதாந்தக் கருத்துகளும் அறிவுபூர்வமாக இயைந்து போகின்றன என அவர் குறிப்பிடுகிறார். ஆம், செர்பியாவில் பிறந்து, க்ராஸ், ப்ராக் பல்கலைக்கழகங்களில் பொறியியல் பட்டம் பெற்று, நியூயார்க்கில் ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவிய மின்னியல் விஞ்ஞானி நிகோலா டெஸ்லாவையே சுவாமிஜி இப்படி குறிப்பிட்டார்.
19- ஆம் நூற்றாண்டின் இறுதியில் மின்காந்த அலைகளின் தன்மைகளை நன்கு புரிந்துகொண்டு உயர் அதிர்வு மின்னலைகள் மற்றும் உயர் மின் அழுத்தம் ஆகிய ஆய்வுகளில் முன்னேறி, அதன் மூலம் மாற்று மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் (அடூtஞுணூணச்tஞு ஞிதணூணூஞுணt) வெற்றி பெற்றார். டெஸ்லாவின் காப்புரிமைக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தித்தான் நயாகரா நீர் வீழ்ச்சியிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் தயார் செய்து பல மைல்கள் தூரத்திற்கு அதைக் கொண்டு செல்ல முடிந்தது. அமெரிக்கத் தொழிற்துறை வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்குண்டு, எக்ஸ்-ரே கதிர், டெஸ்லா சுருள் ஆகியவற்றில் இவர் செய்த கருவிகள் இன்றளவும் பயன்படுகின்றன.
சுவாமி விவேகானந்தர் 1895 - ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் உரையாற்றினார். அவரது கருத்துக்கள் அமெரிக்கர்களிடையே பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் தோற்றுவித்தன. சுவாமிஜியின் வேதாந்தக் கருத்துகள் பற்றிக் கேள்விப்பட்ட விஞ்ஞானி டெஸ்லா, அவரது சொற்பொழிவை நேரில் கேட்க, 1896 ஜனவரி- பிப்ரவரியில் ஞாயிற்றுக்கிழமைக் கூட்டம் ஒன்றிற்குச் சென்றிருந்தார். தாமதமாகச் சென்றதால் அமர இடமின்றி நின்று கொண்டே கேட்டார். பிறகு அந்த ஆண்டு பிப்ரவரி 5- இல் தொழிலதிபர் ஆஸ்டின் என்பவர் இல்லத்தில் சுவாமிஜியும் டெஸ்லாவும் சந்தித்தனர். சுவாமிஜியின் பக்தையான பிரெஞ்சு நடிகை சாரா பென்ஹெர்ட்டும் உடனிருந்தார். தத்தம் துறைகளில் அன்று புகழின் உச்சத்திலிருந்த இம்மூவரின் சந்திப்பு ஒரு வரலாற்று நிகழ்வு.
சுவாமிஜி கூறிய பிரபஞ்சத் தத்துவமும் டெஸ்லாவின் நவீன பவுதிக விஞ்ஞானக் கருத்துகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பின் சுவாமிஜியை மீண்டும் சந்திக்க வேண்டி டெஸ்லா கீழ்க் கண்ட கடிதத்ததை அனுப்பினார். அன்பிற்குரிய ஐயா, தாங்கள் எழுப்பிய வினாக்களுக்குக் கடிதம் மூலம் பதில் தருவது கடினம், ஆகையால் கிழக்கு ஹூஸ்டன் தெருவில் 45- ஆம் எண்ணில் உள்ள என் ஆய்வுக்கூடத்திற்குத் தங்களுக்கு உகந்த சமயத்தில் அடுத்த வாரம் வரவும். இக்கடிதத்தைக் கண்ட சுவாமிஜி மகிழ்ந்தார். இது பற்றி இங்கிலாந்தில் உள்ள தமது சீடருக்குக் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார். வேதாந்தம் கூறும் பிராணன், ஆகாசம், கல்பங்கள் போன்றவற்றைக் கேட்டு டெஸ்லா மிகவும் மகிழ்ந்தார். நவீன விஞ்ஞானம் ஏற்கும் கொள்கைகள் இவை மட்டுமே என்பது அவரது முடிவு. ஆகாசம், பிராணன் இரண்டும் மஹத் அல்லது பிரபஞ்ச மனதிலிருந்து வெளிப்படுகின்றன.
உந்துவிசை (ஊணிணூஞிஞு) மற்றும் பருப்பொருள் இரண்டையும் நிலை ஆற்றலாக (கணிtஞுணtடிச்டூ உணஞுணூஞ்தூ) மாற்றிவிட முடியும் என்பதைக் கணித முறையில் நிரூபிக்க முடியும் என்று கருதி அதற்காக என்னை அழைத்துள்ளார். அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் வேதாந்தத்தின் பிரபஞ்சத் தத்துவஇயல் (இணிண்ட்ணிடூணிஞ்தூ) உறுதியான அஸ்திவாரத்தில் நிலைபெறும். இப்போது நான் வேதாந்தத்தின் படைப்புக் கொள்கை மற்றும் மரணக் கொள்கை (உண்ஞிடச்tணிடூணிஞ்தூ) பற்றி ஆராய்ந்து வருகிறேன். அவை நவீன அறிவியலுடன் முற்றிலும் ஒத்துள்ளன. ஒன்றை விளக்கினால் மற்றது விளங்கிவிடும். எனினும் மேற்கண்ட மேதைகளின் அடுத்த சந்திப்பில் தமது கொள்கைகளை, கணிதமுறையில் நிரூபித்துக் காட்டுவதற்கு டெஸ்லாவால் இயலவில்லை என அறியப்படுகிறது. பருப்பொருளும் ஆற்றலும் (ட்ச்ttஞுணூ ச்ணஞீ ஞுணஞுணூஞ்தூ) வெவ்வேறானவை என்றே டெஸ்லா எண்ணியிருந்தார்.
அணு என்பது திடமான, உடைக்க முடியாத பிரிக்க முடியாத ஒன்று என நியூட்டன் கூறியதையே 19- ஆம் நூற்றாண்டு அறிஞர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால் பருப்பொருளும் ஆற்றலும் அடிப்படையில் ஒன்றே. ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும் என்ற வேதாந்தக் கருத்தை நிகோலா நம்பவில்லை. அவரைவிட சுவாமிஜி பல படிகள் முன்னதாகச் சிந்தித்தார். ஆகாசம், பிராணன் ஆகியவற்றின் ஒருமை பற்றிப் பேசிய சுவாமிஜியின் கருத்தைப் பின்னர் ஐன்ஸ்டீன் அறிவியல் பூர்வமாக நிரூபித்தார். பருப்பொருள் மற்றும் ஆற்றல் (சுவாமிஜி கூறிய ஆகாசம் மற்றும் பிராணன்) ஆகியவற்றிற்கிடையேயான ஒருமையை நிரூபித்த ஐன்ஸ்டீன் அத்தகைய நிலைக்கு பொருண்மைச் சக்தி (Mச்ண்ண் உணஞுணூஞ்தூ) எனப் பெயரிட்டார். எனினும் டெஸ்லா தனது இறுதிகாலத்தில் பருப் பொருளை பொருண்மைச் சக்தியாக மாற்ற இயலும் என்ற சுவாமிஜியின் கருத்தை ஏற்று, தமது முடிவைப் பிரசுரித்தார். அந்தக் கட்டுரையில் 40 ஆண்டுகளுக்கு முன் சுவாமிஜி பயன்படுத்திய அதே சமஸ்கிருத வார்த்தைகளை நினைவு கூர்ந்து எழுதியிருந்தார்.
மிகப் பெரும் விஞ்ஞானியான டெஸ்லா, சுவாமிஜியின் சொற்பொழிவுக் கருத்துகளால் ஆராய்ச்சிபூர்வமாகத் தூண்டப்பட்டாலும் அதை உடனடியாக சுவாமிஜியின் முன் நிரூபித்துக் காட்ட இயலவில்லை. எனினும் பிறகு ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானியால் அது நிரூபிக்கப்பட்டது என்பதையும் அறிகிறோம். |
|
|
|