Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கஜபதியின் கனவு!
 
பக்தி கதைகள்
கஜபதியின் கனவு!

வீரநரசிம்ம கஜபதி என்னும் விஜயநகர மன்னர் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை புறப்பட்டார். வரும் வழியில் திருப்பதி பெருமாளை தரிசிக்க மலையேறினார். ஏழுமலையானை தரிசித்த பின், அங்கு கோபுரம் கட்ட உத்தரவிட்டார். ராமேஸ்வரம் யாத்திரையை முடித்து விட்டு, மீண்டும் திருப்பதி வந்தார். கோபுரம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. பெருமாளை தரிசித்த அவர், மலையிலேயே தங்கினார்.  அன்றிரவு கனவில் பாம்பு வடிவில் தோன்றிய ஆதிசேஷன்,மன்னா! இந்த மலையே என் உடம்பாகும். இங்கு கோபுரம்கட்டினால் ஏற்படும் பாரத்தை என்னால் தாங்க முடியாது, என்று சொல்லி விட்டு கருவறைக்குச்சென்றார். ஏழுமலையானின் வலக்கையில்சுற்றிக் கொண்டார். பதறி எழுந்த மன்னர், பண்டிதர்களை அழைத்து கனவுக்கான விளக்கத்தை கேட்டார். அவர்கள்,  மன்னா! கோபுரப்பணியை இப்போதே நிறுத்தி விடுவோம். ஆதிசேஷனை அமைதிப்படுத்தும் விதத்தில் பரிகாரமாக தங்க நாகாபரணம் ஒன்றைச் செய்து பெருமாளுக்கு அணிந்து விடுவோம், என்று கூறினர். அதன்படி, வீரசிம்ம கஜபதி அளித்தநாகாபரணமே இன்றும் ஏழுமலையானின்வலது கைக்கு அழகு சேர்க்கிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar