|
உத்பலவர்ணா என்ற பணக்காரப் பெண்,புத்தரின் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தாள். அவளின் அழகைக் கண்டு, இளவரசர்மற்றும் செல்வர்கள் திருமணம் செய்ய ஆசைப்பட்டனர். உத்பலவர்ணாவின் தந்தையிடம்பெண் கேட்டு வந்தனர். அவளுக்கு திருமணம் நடத்தினால் மணம் முடிக்கும் ஒருவரைத் தவிர, மற்ற முக்கியஸ்தர்களின் பகைக்கு ஆளாகநேரிடுமே என்ற கலக்கம் அவருக்கு எழுந்தது. மகளை அழைத்து, உன்னை விரும்பும் அனைவருமே பணபலமும். ஆள்பலமும் கொண்டவர்கள். நீ யாரைத் தேர்ந்தெடுத்தாலும், அவருக்கு எதிரியாக மற்றவர்கள் மாறி விடுவர். இன்னும் சொல்லப்போனால், அவரைக் கொல்லவும் கூட தயங்க மாட்டார்கள், என்று தன்இக்கட்டான நிலையை எடுத்துச் சொன்னார். அப்பா... நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கும் கஷ்டமாகத் தானிருக்கிறது.இருந்தாலும் கவலை வேண்டாம். நான் எடுக்கப் போகும் முடிவால் எல்லோருக்குமே நன்மையேஉண்டாகும். நீங்களும் நிம்மதியோடு வாழலாம் என்றாள். புத்தரின் திருவடியைச் சரணடைந்த உத்பலவர்ணா, அடுத்த நாளே பவுத்த துறவியாக மாறினாள்.தியாக தீபமான அவளைக்கண்டு அனைவரும் கை குவித்து வணங்கினர். |
|
|
|