|
பாண்டுரங்கன் பக்தரான தாமாஜி, தன் வீட்டில் சமைத்த உணவை எடுத்துச் சென்று, பாண்டுரங்கனுக்கு நைவேத்யம் செய்வார். ஒருநாள், அவர் வெளியூர் செல்ல நேர்ந்ததால் மனைவியிடம்,நாளை நைவேத்யம் செய்ய நம் மகன் நாமதேவரைகோவிலுக்கு அனுப்பு, என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார். மனைவியும் சிறுவன்நாமதேவரிடம் உணவைக் கொடுத்து அனுப்பினாள். நாமதேவர் மனதிற்குள், நைவேத்யம் செய்தால்உணவைக் கடவுள் நிஜமாகவே சாப்பிடுவார் என்று எண்ணிக் கொண்டான். பாண்டுரங்கன் சந்நிதிக்குச் சென்ற அவன், சுவாமி!உங்களுக்காக உணவு எடுத்து வந்திருக்கிறேன். வந்து சாப்பிடுங்கள் என்றான். சிலையாக நின்றபாண்டுரங்கன் சிறுவனை வேடிக்கை பார்த்தார். நீண்ட நேரமானதால்சிறுவன் அழ ஆரம்பித்தான்.நான் சின்னவன்என்பதால் தானே, உணவை சாப்பிட மறுக்கிறீர்கள். என் மீது இரக்கம் காட்டாவிட்டால், வீட்டுக்குப் போகாமல் இங்கேயே பட்டினி கிடப்பேன் என்றான். பாண்டுரங்கனின் மனம் உருகியது. சிறுவன் முன் தோன்றி உணவைசாப்பிட்டார்.
மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு ஓடி வந்த நாமதேவர், அம்மா! கொஞ்சம் கூட மீதி வைக்காமல் உணவை பகவான் சாப்பிட்டு விட்டார். இதோ பாருங்கள் காலித்தட்டு என்றான்.இரவு வீடு திரும்பியதாமாஜியும் நடந்ததைஅறிந்து திகைத்தார். மறுநாளும்,நாமதேவரிடமே உணவைக் கொடுத்தனுப்பினார்.மகன் அறியாத விதத்தில் அவனைப் பின்தொடர்ந்தார். கோவிலில் ஒரு ஓரத்தில் நின்று நடப்பதைக் கவனித்தார். அங்கு நாமதேவர் பாண்டுரங்கனிடம்,சுவாமி! நேற்று போல இன்றும் உணவு கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான். பாண்டுரங்கன் சிலையாக நின்றார்.நேரம் கடந்தது. வருந்திய சிறுவன், சுவாமி நேற்று அவ்வளவு உணவையும்சாப்பிட்டீர்களே. இன்று வர மறுக்கிறீர்களே. நீங்கள் சாப்பிடாவிட்டால், நான் பொய் சொல்வதாக வீட்டில் நினைப்பார்களே! என்று அழுதான். சிறுவனின் அழைப்பை ஏற்ற பாண்டுரங்கன் நேரில் தோன்றி, உணவைச்சாப்பிட்டு விட்டு மறைந்தார். தாமாஜிக்கு ஆச்சரியம் தாளவில்லை. மகனே! உன்னால் நானும் பாண்டுரங்கனை தரிசிக்கும் பேறு பெற்றேன். உன்னைப் போல உத்தம பிள்ளை யாருக்கு கிடைக்கும்! என்று சொல்லி மகிழ்ந்தார். ஆழ்ந்த பக்திக்கு ஆண்டவன் கட்டுப்படுகிறான் என்பது இந்தக் கதையின்தத்துவம். |
|
|
|